Mariyathai Raman and the Mystery of the Horse’s Footprints – குதிரையின் கால் தடம் மரியாதையை ராமன் கதை : ஒரு நாள் அரசாங்கத்தோட கஜானாவுல மிக பெரிய திருட்டு நடந்துடுச்சு

அரசரும் அரசு அதிகரிகளும் ஒண்ணா சேர்ந்து யார் திருடன்னு கண்டுபிடிக்க முயற்சி செஞ்சாங்க
எவ்வளவு முயற்சி செஞ்சும் ஒரு தடயமும் கிடைக்கல,ஆனா அவுங்களுக்கு ஒரு குதிரையோட கால் தடம் மட்டும் கிடைச்சுச்சு
அந்த குதிரையோட கால்தடத்த வச்சு குதிரையையோ திருடனையோ கண்டுபிடிக்க முடியாதுனு தெரிஞ்சிகிட்டா அரசர் மரியாதை ராமனை கூப்பிட்டு அனுப்புச்சாறு
அங்க வந்த மரியாதை ராமன் கிட்ட அந்த குதிரையோட கால் தடத்தை காமிச்சாரு அரசர்
உடனே இது குதிரையோட காலடி தான் ஆனா அந்த குதிரையோட குழம்ப பாதுகாக்க குதிரைவாலி பொருத்தி இருக்காங்க ,இந்த தடத்த பாக்குறப்ப வழக்கத்த விட பெருசா இருக்கு

அதனால பெரிய குதிரைவாலி பொருத்தி இருக்குற குதிரையை கண்டுபிடிங்கனு சத்தம் போட்டு சொன்னாரு மரியாதை ராமன்
அங்க நடந்தது எல்லாத்தையும் கூட்டத்தோட கூட்டமா நின்னு கேட்டுகிட்டு இருந்தான் அந்த திருடன்
அந்த திருடனுக்கு மரியாதை ராமன் சொன்னது கேட்டுச்சு ,அடடா நம்ம குதிரையோட குதிரைவாலிய வச்சு நம்மள பிடிக்க போறாங்கன்னு பயந்தான்
உடனே வீட்டுக்கு வந்த திருடன் ஏற்கனவே பொருத்தி இருந்த குதிரைவாலிய எடுத்துட்டு சின்ன குதிரைவாலிய பொறுத்துனான்

மறுநாள் ஒவ்வொரு வீடா சோதனை செஞ்சுட்டு வந்த அரசு அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறா சின்னதா இருந்த குதிரைவாலி பொறுத்துன குதிரைய பார்த்ததும் இவன் தான் திருடன்னு முடிவு செஞ்சு அரசர்கிட்ட பிடிச்சிட்டு போனாங்க
அப்பத்தான் திருடனுக்கு புரிஞ்சது , குதிரையோட குதிரைவாலி பத்தி சத்தமா மரியாதைய ராமன் சொன்னது திருடனை பயமுறுத்தத்தான்
அதனால பயந்து சாதாரணமா இருந்த குதிரைவாலிய அளவுக்கு குறைவா செஞ்சு அது அரசு அதிகாரிங்களுக்கு தெரிஞ்சு தான் மாட்டிகிட்டத நினச்சு வருத்தப்பட்டான் திருடன்
புத்திசாலியான மரியாதைய ராமன் சுலபமா திருடன கண்டுபிடிச்சது அவரோட புகழ ஊர் பூராம் கொண்டுபோய் சேர்த்து