Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும்

Mariyathai Raman and the Missing Cow – மரியாதை ராமனும் காணாமல் போன பசுவும் :- ஒருநாள் ஒரு கிராமத்துல ஒரு பசு மாடு காணாம போய்டுச்சு

அந்த பசு மாட்ட யார் தேடியும் கிடைக்கல ,அந்த பசு மாட்டோட கால் தடமும் பக்கத்துல நடந்து போன திருடனோட கால் தடமும் ஆத்துக்கு பக்கத்துல போய் நின்னுடுச்சு ,அதுக்கு அப்புறம் எந்த கால் தடமும் தெரியல

உடனே பக்கத்து ஊருல இருக்குற புத்திசாலியான மரியாதை ராமனுக்கு செய்தி சொல்லி அனுப்புச்சாங்க

உடனே அந்த கிராமத்துக்கு வந்த மரியாதை ராமன் பசு கட்டியிருந்த வீட்ட நல்லா சுத்தி பாத்தாரு

ராத்திரி யாரோ பசு மாட்ட திருடிட்டு போயிருக்காங்க ,ஆனா அந்த வீட்டுல இருக்குற எல்லா மாட்டுக்கும் கழுத்துல மணி கட்டி இருக்கு

அதுவும் சீக்கிரமா அவுக்க முடியாத அளவுக்கு கம்பி போட்டு கட்டி இருக்கு அப்படி இருக்கிறப்ப திருடன் சுலபமா அந்த மணிய அவுத்துட்டு

சத்தம் வராதபடி அந்த மணிய பத்தரமா தன்கூட எடுத்துக்கிட்டு போயிருக்கான் ,அதனால சுலபமா கட்டு கம்பியை அவுக்குற அளவு திறமை சாலி இந்த ஊருல யாருனு கேட்டாரு

அதுக்கு அங்க இருக்குற இரும்பு வேலை செய்யுற கொல்லன் தான்னு எல்லாரும் சொன்னாங்க

உடனே மரியாதையை ராமன் உங்க விசாரணையை முதல்ல அவன்கிட்ட இருந்து தொடங்குங்கன்னு சொன்னாரு

உடனே காவலாளிங்க எல்லாரும் அந்த கொல்லன விசாரிக்க ஆரம்பிச்சாங்க

அந்த கொல்லனும் தான்தான் அந்த பசு மாட்ட திருடுனதுனு ஒத்துக்கிட்டான்