Little Red Riding Hood – ஓநாயும் சிகப்பு முக்காடு பெண்ணும் :- ஒரு கிராமத்துல ஒரு அழகான பாப்பா இருந்துச்சு ,அவளுக்கு எப்பவுமோ குளிருக்கு சிகப்பு முக்காடு போட்டுகிறது ரொம்ப பிடிக்கும் ,அதனால அங்க இருந்த எல்லாரும் அவளை லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் னு சொல்லுவாங்க

அந்த பாப்பா ஒருநாள் அவுங்க பாட்டி வீட்டுக்கு கிளம்பி போனா ,போற வழியில ஒரு அவலட்சணமான விறகு வெட்ரவர பாத்தா ,அவரு கிட்ட போய் ஐய்யா நீங்க நலமான்னு கேட்டா

தங்கிட்ட யாரும் பேச மாட்டாங்கனு தனிமையில வாழ்ந்துட்டு வந்த அந்த விறகு வெட்டுபவர் ,இந்த அழகான பெண்ணோட கரிசனமான விசாரிப்ப கேட்டதும் ரொம்ப மகிழ்ந்து போனாரு

அழகிய பெண்ணே ஏன் காட்டுக்குள்ள தனியா போறேன்னு கேட்டாரு அந்த விறகு வெட்டி ,அதுக்கு அவ சொன்னா நான் என்னோட பாட்டி வீட்டுக்கு போறேன்னு ,

இத ஒரு ஓநாய் ஒளிஞ்சிருந்து கேட்டுகிட்டே இருந்துச்சு ,திடீர்னு ஒரு யோசன தோணுச்சு அந்த ஓநாய்க்கு ,
உடனே வேகமா ஓடிப்போய் அந்த பாப்பாவோட பாட்டிய அப்படியே முழிங்கிடுச்சு

அந்த பாட்டியோட கண்ணாடி ,டிரஸ் எல்லாத்தையும் போட்டுக்கிட்டு பாப்பாவுக்காக காத்துட்டு இருந்துச்சு

அங்க வந்த பாப்பா தன்னோட பாட்டியோட உருவத்துல ஏதோ வித்தியாசம் இருக்கேன்ன்னு பாட்டி ஏன் உங்க கண்கள் பெருசா மாறிடுச்சுன்னு கேட்டா
அதுக்கு அந்த ஓநாய் சொல்லுது அதுவா உன்ன நல்லா பாக்குறதுக்குனு சொல்லுச்சு
பாட்டி ஏன் உங்க கைகள் ஏன் பெருசா மாறிடுச்சுன்னு திரும்பவும் கேட்டா அந்த பாப்பா
அதுக்கு அந்த ஓநாய் சொல்லுது அதுவா உன்ன நல்லா தூக்கி கொஞ்சுறதுக்குனு சொல்லுச்சு
அடுத்து இது என்ன உங்க பல் எல்லாம் பெருசா மாறிடுச்சுனு கேட்டா அந்த பாப்பா
உடனே அவகிட்ட வந்த அந்த ஓநாய் உன்ன அப்படியே முழுங்குறதுக்குன்னு சொல்லிட்டு அவள பிடிக்க போச்சு

உடனே பயந்துபோன அந்த பாப்பா சத்தமா கத்த ஆரம்பிச்சா ,இந்த சத்தம் கேட்ட அந்த விறகு வெட்டுபவர் வேகமா ஓடி வந்தாரு

வீட்டுக்குள்ள நடக்கிறத தெரிஞ்சிகிட்ட அவரு கோடரிய எடுத்து அந்த ஓநாயோட தலையில ஒரு அடி அடிச்சாரு
டக்குனு தன்னோட வாயில இருந்த அவுங்க பாட்டிய துப்பிட்டி ஓடி போய்டுச்சு அந்த ஓநாய்

குழந்தைகளா நீங்களும் இந்த பாப்பா மாதிரி அடுத்தவங்கள மரியாதையாவும் ,அன்போடவும் அணுகுனீங்கன்னா எல்லாரும் உங்களுக்கு உதவி செய்வாங்க .