Little Boy and Wise Old Man – ஓட்ட பந்தயம் :- ஒரு ஊருல ஒரு சின்ன பையன் இருந்தான் ,அவன் ஓட்ட பந்தயத்துல கெட்டகாரனா இருந்தான்
பெரிய பசங்க கூட போட்டி வச்சாலும் கூட அவன் சுலபமா ஜெயிச்சிடுவான்
ஒரு நாள் அந்த ஊர் பெரியவர் ஒரு போட்டி வச்சாரு ரெண்டு சின்ன பசங்கள அவன்கூட போட்டி போட வச்சாரு
கூட்டத்துல இருந்த எல்லோரும் அந்த சின்ன பையனுக்கு ஆதரவா சத்தம் போட்டாங்க
அந்த ஆதரவ கேட்ட அந்த சின்ன பையன் இன்னும் வேகமா ஓடுனாண்
அதுக்கு அப்புறமா இன்னும் கொஞ்சம் பெரிய பையன போட்டிக்கு அனுப்புச்சாங்க
இதுக்கும் கூட்டத்துல இருந்த எல்லாரும் இவனுக்கு ஆதராவாவே இருந்ததால வேகமா ஓடி ஜெயிச்சான்
அதுக்கு அப்புறமா ஒரு முதியவரும் ஒரு கால் ஊனமானவரும் போட்டியில கலந்துக்கிட்டாங்க
அந்த பையனுக்கு இப்ப யாருமே கைதட்டல
இத கவனிச்சா அந்த பையனுக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு
என்னதான் ஓட்ட பந்தயத்துல கெட்டி காரனா இருந்தாலும் இவுங்களோட ஓட அவனுக்கு ஒரு மாதிரி இருந்துச்சு
அதனால அவுங்க ரெண்டுபேரையும் கூடவே கூட்டிகிட்டு ஒன்னாவே ஓடுனாண் அந்த பையன்
மூணு பேரும் ஒன்னாவே கடைசி கோட்ட தாண்டுனாங்க
இத பத்த கூட்டம் கைதட்டுச்சு
கடைசியா ஊர் தலைவர்கிட்ட வந்த அந்த சின்ன பையன் என் இவுங்க நான் ஓடும்போது கைதட்டம இப்ப கைதட்டறாங்கன்னு கேட்டான்
ஒருத்தனோட திறமைக்கு கூட்டம் எப்பவும் கைதட்டும் ஆனா உனக்கு கிடைச்ச இந்த கடைசி கைத்தட்டு மக்கள் உனக்கு கொடுத்த மரியாதையை
அந்த மரியாதையை நீ ஏத்துக்கிட எல்லா தகுதியும் உனக்கு இருக்குன்னு சொன்னாரு