Learning the Value of Caution-Crow and Rabbit- காக்கையும் முயலும் :- ஒரு காட்டுல ஒரு காக்கையும் முயலும் நண்பர்களா இருந்துச்சுங்க
ஒருநாள் உணவு தேடி பக்கத்து கிராமத்துக்கு போச்சுங்க ,அப்படி போகுறப்ப ஒரு விளை நிலத்தை பாத்துச்சுங்க
அங்க நிறய உணவு தானியங்கள் பயிரிட பட்டு இருந்துச்சு ,நிறய சோளமும் ,கேரட்டும் விளைஞ்சு இருக்குறத பார்த்துச்சுங்க
உடனே அத பறிச்சி திங்கலாம்னு முடிவு செஞ்சு பக்கத்துல போச்சுங்க
அப்பத்தான் அங்க காக்கைய விரட்டுற சோள கொள்ள பொம்மை வச்சிருக்குறத பார்த்துச்சு முயல்
உடனே காக்கா கிட்ட அங்க பாரு உங்கள விரட்ட சோள கொள்ள பொம்மை வச்சிருக்காங்கனு சொல்லுச்சு
அத பார்த்த காக்கா அது வெறும் உயிர் இல்லாத பொம்மதான் இருந்தாலும் விவசாயிங்க காக்காய விரட்ட முயற்சி செஞ்சிருக்காங்க அதனால நீ போய் உணவு எடுத்துட்டு வானு சொல்லுச்சு
அதுக்கு முயல் பறவைகள விரட்ட முயற்சி செஞ்சு சோள கொள்ள பொம்மை வச்ச விவசாயி கண்டிப்பா எங்களைப்போல மிருகங்களுக்கு வலை ஏதாவது வச்சிருப்பாரு அதனால தெரிஞ்சே ஆபத்துல சிக்க வேண்டாம்னு சொல்லுச்சு
ஆழம் அறியாமல் காலை விட கூடாதுனு சொல்ற பழமொழிக்கு ஏற்ப பசியோட இருந்தாலும் தெரிஞ்சே வம்ப விலைகொடுத்து வாங்க வேணாம்னு திரும்ப காட்டுக்கே போயிடுச்சுங்க காக்கையும் முயலும்