சோம்பேறி பையன் – Lazy Dreamer Story in Tamil:- ஒரு ஊருல ராஜ்னு ஒரு இளைஞன் வாழ்ந்துகிட்டு வந்தான்
அவனுக்கு ரொம்ப சோம்பேறித்தனம் இருந்துச்சு ,அவன் தன்னோட ஊர் காரங்க கொடுக்குற உணவ மட்டும் வச்சுக்கிட்டு,எந்த வேலைக்கும் போகாம வீட்டிலயே இருப்பான்
ஒருநாள் உணவு கேட்டு போன இடத்துல நிறைய பொருள் அவனுக்கு கிடைச்சது
உடனே சந்தோசப்பட்ட ராஜ் வீட்டுக்கு வந்து பத்திரமா அந்த பொருள் எல்லாத்தையும் பத்திரப்படுத்திட்டு மதிய நேரமே படுத்து தூங்குனான்
தூங்கும்போது சோம்பேறித்தனமா அவன் தன்ன கற்பனை பண்ணிக்க ஆரம்பிச்சான்
இந்த உணவு பொருள வித்து நிறைய காசு சம்பாரிப்பேன் ,அந்த காச வச்சு இன்னும் நிறைய உணவு பொருள் வாங்கி அத பக்கத்துக்கு ஊருக்கு கொண்டு போயி விப்பேன்
அந்த காச வச்சு மாடு வாங்குவேன் ,மாட்டு பால் வித்து காசு சம்பாரிப்பேன், அந்த மாடு குட்டி போடும் அந்த குட்டி வளரும்
நான் நிறைய பணம் சம்பாரிச்சு பணக்காரநா மாறுவேன்னு நினச்சுகிட்டே கால நீட்டினான்
கால் பட்டு அந்த மண் பாத்திரம் கீழ விழுந்து உடைஞ்சிடுச்சு
சோம்பேறியோட வாழ்க்கை இப்படித்தான் போகும் , அவுங்க எந்த வேலையும் செய்யமாட்டாங்க அவுங்களுக்கு கிடைக்கிறதுகூட நிலைக்காது