கிருஷ்ணரும் குசேலரும் – Krishna Story in Tamil :- கிருஷ்ணரும் குசேலரும் குழந்தை பருவத்தில் இருந்தே சிறந்த நண்பர்களாக இருந்தனர்

பெரியவர்கள் ஆன பிறகு குசேலருக்கு வறுமையான வாழ்க்கை கிடைத்தது
அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தினமும் பசியோடு இருந்தனர்

குசேலரின் மனைவி அவரிடம் நீங்கள் உங்கள் நண்பரிடம் சென்று நமக்கு எதாவது உதவி செய்யுமாறு கேட்டு பெறுமாறு கூறினார்

கிருஷ்ணர் மிக பெரிய ராஜா அவருக்கு நாம் எதாவது கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார் குசேலர்
உடனே அவரது மனைவி அரிசி அவள் படைத்து உருண்டையாக்கி கொடுத்தனுப்பினார்

குசேலர் தனது அரண்மனைக்கு வந்ததை அறிந்த கிருஷ்ணர் உடனே நேரடியாக குசேலரை பார்க்க வந்தார்
தனது நண்பர் குசேலரை நன்கு வரவேற்று அவர் கொண்டு வந்த அவளை உண்டார் கிருஷ்ணர்

இந்த விருந்தோம்பலை பார்த்த குசேலர் தனது வறுமையை மறந்து ஒன்றுமே கேட்காமல் வீடு திரும்பினார்
ஆனால் வீடு புதிதாக தோற்றமளித்தது ,அவரது மனைவி மற்றும் குழந்தைகள் புது துணி உடுத்தி இருந்தனர்

கிருஷ்ணர் தான் சொல்லாமலே தன்னுடைய இயலாமையை தெரிந்து கொண்டுவிட்டார் ஆகவேதான் தனக்கு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளார் என்பதை தெரிந்துகொண்டு மிகவும் சந்தோச பட்டார் குசேலர்