கிருபானந்த வாரியார் கம்பர் செய்த தவறு

சொல்லையோ அல்லது வாக்கியத்தை நாம் கருத்தாழமின்றிப் பார்த்தால் அதிலிருந்து தவறான அர்த்தங்களே கிடைக்கும். எதையும் நுனிப்புல் மேய்வது போல் கண்மூடித்தன மாகப் படிப்பதோ, படித்து அர்த்தம் புரிந்து கொள்வதோ கூடாது. மிகவும் கவனமாகப் படித்து ஆழ யோசித்து அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும்

இப்படித்தான் ஒரு கவிஞர், ஒரு விஷயத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, அதில் குழம்பிப் போய் ஆன்மீகப் பெரியார் கிருபானந்த வாரியாரிடம் வந்தார்

இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தக் கவிஞர், “ஐயா! கவிக்கே சக்கரவர்த்தி என்று கம்பர் போற்றப்படுகிறார். அப்படிப்பட்ட கம்பரும் தனது இராமாயண காவியத்தில் ஒரு தவறை செய்து விட்டார் என்றார்

என்ன தவறு’ என்று கேட்டார் கிருபானந்த வாரியார்

ராமன் விசுவாமித்திரருடன் வீதியில் உலா சென்று கொண்டிருந்தபோது, ‘வீதியிலிருந்த மாதர் ராமனைப் பார்த்து ‘மாதர் தாமரைக் கண்ணால் நோக்கினர்’ என்று எழுதியுள்ளார். பொதுவாக ஆடவரின் முகத்தை தாமரை மலருக்கும்,பெண்டிரின் முகத்தைக் குமுத மலருக்கும் ஒப்பிடுவதுதான் இலக்கிய மரபு ஆனால் இங்கு எழுதியுள்ளார். பொன் அவர் செய்த தவறு தான் என்றார்

அணும் போட்டுப் புள்ளமைந்த வாரியார், அன்பனே சாமனைப் பார்த்து மாதர் தாமரைக் கண்ணால் வானெர் என்ற வாக்கியத்தில் இருக்கின்ற பொருளை தன் கலந்தறியவில்லை என நினைக்கிறேன், கம்பர் உண்மையில் மாதரின் முகத்தைத் தாமரை மலருக்கு ஒப்பிடவே இல்லை. அந்த வாக்கியத்தை ‘மாதர் தம் அரைக் கண்ணால் நோக்கினர் எனப் பதம் பிரித்து உணர வேண்டும். ஆடவரும் பகைவரும் நேருக்கு நேர் நோக்குவர். ஆனால் மாதர் ஆடவரைப் பார்க்கும்போது அரைக் கண்ணால் .. அதாவது கடைக்கண்ணால் நோக்குவர். இந்த இலக்கிய மரபுப்படிதான் இந்து வாக்கியத்தைக் கம்பர் அமைத்துள்ளார். இதில் எங்கே இருக்கிறது தவறு?” என்றார்.

இந்தத் தெளிவான விளக்கத்தைக் கேட்டறிந்த அந்தக் கவிஞர், “ஐயா கம்பரின் வாக்கியத்திலிருந்த இந்த சூட்சுமத்தை இதுவரை நான் உணரவில்லை. மேலும் இதுபோன்ற தெளிவானதொரு விளக்கத்தை இதுவரை எந்த அறிஞரும் எனக்கு உணர்த்தவில்லை. இனிமேல் எதையும் ஆழப் படிப்பேன். தங்களுக்கு என் நன்றி” என்று கூறினார்

அதைக் கேட்டு மென்மையாகப் புன்னகைத்தார் கிருபானந்த வாரியார்