சிங்கமும் நரியும் நீதிக்கதை – King Lion and fox moral story in Tamil:- ஒரு காட்டுல ஒரு பெரிய சிங்கம் இருந்துச்சு
அந்த சிங்கம் அந்த காட்டையே நல்லபடியா ஆட்சி செஞ்சுகிட்டு இருந்துச்சு ,அதுக்கு ஒரு நரி ரொம்ப நண்பனா இருந்துச்சு
ஒரு தடவ காட்டுக்குள்ள தண்ணி பஞ்சம் வந்துச்சு , அப்ப நரி சிங்கத்துக்கிட்ட சொல்லுச்சு
உங்க குகை கிட்ட ஒரு கிணறு இருக்கு அதுல நிறய தண்ணி இருக்கு ,ஆனா காட்டுக்குள்ள இருக்குற குளம் எல்லாம் வத்தி போச்சு
அதனால மத்த மிருகங்க கிட்ட இருந்து இந்த கிணத்து தண்ணிய பத்திரமா பாதுகாத்தா மழை காலம் வர்ற வரைக்கு நாம நல்லா இருக்கலாம்னு சொல்லுச்சு
ஆனா காட்டுக்கு அரசனான சிங்கம் ,தன்னோட ஆட்சியில இருக்குற இந்த மிருகங்களுக்கு தண்ணி கொடுக்க மாட்டேன்னு சொல்ல மாட்டேன்னு சொல்லுச்சு
உடனே எல்லா மிருகங்களையும் கூப்பிட்டு ,உங்களுக்கு இந்த கிணத்துல இருந்து தண்ணி தினமும் தாரேன் அதுக்கு பதிலா புதுசா ஒரு குளம் வெட்ட எனக்கு உதவி செய்யுங்கன்னு சொல்லுச்சு
உடனே எல்லா மிருகங்களும் தங்களோட உழைப்பை எல்லாம் போட்டு ,ஒரு குளத்தை வெட்டுச்சுங்க ,அப்படி உதவி செஞ்சதுக்கு பலனா சிங்கராஜா கிணத்துல இருந்து தண்ணி எடுத்துகிடுச்சுங்க
கொஞ்ச காலத்துக்கு அப்புறம் மழை காலம் வந்துச்சு ,எல்லா மிருகங்களும் மகிழ்ச்சி அடையிற மாதிரி அந்த புதுசா வெட்டுனா குளத்துல நிறய தண்ணி சேர்ந்துச்சு
அதுக்கு அப்புறம் அந்த காட்டுக்குள்ள பஞ்சமே வரல ,இத பார்த்த நரி தான் சுயநலத்தோடு நடந்துக்கிட்டத நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு