Karna’s Generosity – Kids Story – கர்ணனின் ஈகை குணம்

Karna’s Generosity – கர்ணனின் ஈகை குணம் – Tamil Moral Story For kids :- ஒரு முறை கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு தேர்ல போய்கிட்டு இருந்தாங்க

Karna's Generosity - Kids Story - கர்ணனின் ஈகை குணம்

அப்ப அருஜுனன் கேட்டான் ஏன் எல்லாரும் கர்ணன மட்டும் கொடையாழினு புகழறாங்கன்னு கேட்டாரு

அதுக்கு கடவுள் கிருஷ்ணர் என்ன பதில் சொல்லுவாருன்னு ஆவலா எதிர் பாத்தாரு அர்ஜுனர்

கிருஷ்ணர் உடனே ரெண்டு தங்க மலைகள உருவாக்குனரு

அர்ஜுனன் இந்த தங்க மலய அந்த கிராமத்து மக்களுக்கு தானம் பண்ணிட்டு வானு சொன்னாரு

உடனே அர்ஜுனன் எல்லா கிராமத்து அழுகளையும் கூட்டி வரிசையா நிக்க வச்சு ஒவ்வொருத்தரோட தேவைகள கேட்டு தங்கத்த கொடுக்க ஆரம்பிச்சாரு

ரெண்டு நாள் கழிச்சு கிருஷ்ணர் கிட்ட வந்து தங்கத்த எல்லாம் கொடுத்து முடிச்சாச்சுன்னு சொன்னாரு அர்ஜுனர்

கிருஷ்ணர் கர்ணன கோபித்து இந்த ரெண்டாவது மலைய அந்த அடுத்த கிராமத்துல உள்ளவங்களுக்கு தானமா கொடுத்துடுன்னு சொன்னாரு

உடனே கர்ணன் அந்த ஊர் மக்கள கூப்பிட்டு இந்தாங்க இந்த தங்க மலை உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்கன்னு சொல்லிட்டு அந்த இடத்த விட்டு போயிட்டாரு

அர்ஜுனர் கிட்ட கிருஷ்ணர் கேட்டாரு இப்பவாவது உனக்கு புரிஞ்சதான்னு

அதுக்கு அர்ஜுனர் குழப்பமா இருக்கவே , கிருஷ்ணர் சொன்னாரு நீ ஒருத்தரோட தேவை எவ்வளவு , அவுங்க அதுக்கு தகுதியானவங்கள்னு பாத்த, கொடுத்ததும் அப்புறமா அவுங்களோட வாழ்த்தொலிய கேட்கவும் நினைச்ச

ஆனா கர்ணன் இந்த மூணையும் எப்போதும் விரும்புறது இல்ல அடுத்தவுங்களுக்கு குடுக்கணும்கிற ஒரு எண்ணம் மட்டுமே அவன் மனசுல இருக்கு அதனாலதான் அவன எல்லாரும் கருணை கடவுள்னு சொல்றாங்க