பர்மாவில் தேங்காய் – How The Coconut Came To Myanmar:- இன்று நாம் மியான்மர் என்றழைக்கும் நாடு முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது .
மியான்மரின் பூர்வகுடிகள் தேங்காயை கோன் பின் (Gon-bin) – குறும்பு செய்பவரின் தலை என்று சொல்லுகிண்டனர்
முன்னொரு காலத்தில் பர்மாவை ஒரு கண்டிப்பு மிகுந்த அரசர் ஆட்சி செய்து வந்தார்

அவர் ஒரு நாள் அரசவையில் இருக்கும்போது படகில் நாடு விட்டு நாடு வந்ததாக மூன்று குற்றவாளிகளை அரசைவை முன்பு கொண்டு வந்து நிறுத்தினர்
அவர்களை கண்ட அரசர் உங்கள் நாட்டில் இருந்து என்ன குற்றம் செய்ததற்க்காக நாடு கடத்தப்பட்டு இங்கு வந்தீர்கள் என கேட்டார்
அதற்க்கு முதல் குற்றவாளி நான் பணக்காரர்களிடம் இருந்து அவர்கள் பொருட்களை திருடி எனதாக்கி கொண்டேன் அதற்க்கான தண்டனையாக எங்கள் நாட்டு அரசர் இந்த நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்,அதனால் இங்கு படகு மூலம் வந்தேன் என்று சொன்னார்
உடனே கண்டிப்பான அரசர் இவன் தன்னிடம் இல்லாத பொருளை அடுத்தவரிடம் இருந்து திருடி இருக்கிறார் ,இவர் செய்தது தவறு என்றாலும் இல்லாமை என்ற நிலைக்கு இவரை வைத்தது அரசின் குற்றமும் ஆகும் அதனால் இவரை நமது சிறையில் சிறிய பணியில் அமர்த்துங்கள் ,நல்லபடியாக நம் நாட்டில் நடந்து கொண்டால் இவருக்கு விடுதலை அளியுங்கள் என்று சொன்னாரு
அடுத்ததாக இருந்த பெண் குற்றவாளியிடம் நீ என்ன குற்றம் செய்தாய் என்று கேட்டார் ,அதற்க்கு அந்த பெண் தனக்கு மந்திரம் தெரியும் என்று கூறி ஊர்மக்களை ஏமாற்றி அதில் வரும் பணத்தில் உணவு உண்டு வந்தேன் என்று கூறினார்
அவளையும் மன்னித்த அரசர் இந்த பெண்ணும் தன் வயிற்று பிழைப்புக்காக திருடி வந்ததினால் இவரையும் நமது சிறை பணியில் அமர்த்துங்கள் என்று ஆணையிட்டார்
அடுத்ததாக இருந்த குற்றவாளியிடம் நீ என்ன குற்றம் செய்தாய் என்று கேட்டார் ,நான் அடுத்தார்களிடம் குறும்பாக பொய்களை கூறுவேன் வேறு ஒன்றும் செய்யமாட்டேன் என்று சொன்னார்

உடனே அரசருக்கு கோபம் வந்தது இந்த நாடு கடத்தும் முடிவில் உனது அரசருடன் நான் ஒத்து போகிறேன் தேவையே இல்லாமல் குறும்பு செய்து அடுத்தவர் நிம்மதியை நீ கெடுத்திருக்கிறாய் அதனாலேயே உன்னை நாடு கடத்தி இருக்கிறார் உங்கள் அரசர்
எனவே இந்த கணமே உனது தலையை வெட்ட அணையிடுகிறேன் என்று சொன்னார் ,அரசர் ஆணையிட்டதும் உடனடியாக அவனை சிறைக்கு அழைத்து சென்று அவனது தலையை வெட்டினர் சேவகர்கள்
வெட்டுப்பட்ட தலை சிரித்து கொண்டே நான் உங்கள் அரசனை பார்க்க வேண்டும்,அவரை வந்து எனக்கு வணக்கம் சொல்ல சொல் என்று சொன்னது ,பயந்துபோன சேவகர் உடனடியாக அரசர் முன் வந்து நடந்ததை கூறனார்

நடவாத காரியம் நடந்ததாக சேவகர் கூறியதை கேட்ட அரசர் ஒரு காவல் அதிகாரியை அனுப்பி தலையை பார்த்து வர சொன்னார்
அந்த அதிகாரியும் வந்து வெட்டுப்பட்ட தலையை பார்த்தார் ,ஆனால் தலை இப்போது பேசவில்லை ,இந்த செய்தி அரசருக்கு தெரிவிக்க பட்டது
கோபம் கொண்ட அரசர் சேவகனை உடனடியாக தூக்கில் போட ஆணையிட்டார்

உடனே மற்ற காவலர்கள் அந்த சேவகனை தூக்கிலிட்டனர் ,சேவகன் தூக்கிலிட பட்ட அடுத்த நிமிடம் தலை மீண்டும் பேசியது ,எப்படி எனது குறும்பு ஒரு நிமிடம் அமைதியாக இருந்து என் தலையை வெட்டியா சேவகனை எப்படி தூக்கில் ஏற்றினேன் பார்த்தாயா என்று கூறி சிரித்தது
இத அரசனிடம் அனைவரும் வந்து கூறினார் ,அவசர பட்டு சேவகனை தூக்கில் போட்டதற்கு வருந்தினான் அரசன் , வாழும் பொது குறும்பு செய்து அனைவரையும் தொந்தரவு செய்தவனின் தலை இப்பொழுதும் குறும்பு செய்கிறது அதனால் இந்த தலையை மிக பெரிய குழி வெட்டி அதில் போட்டு மூடுங்கள் என்று கூறினார் அரசர்

சிறிது நாட்களுக்கு பிறகு அந்த தலை புதைத்த இடத்தில ஒரு மரம் முளைத்தது ,அது கொடுக்கும் காய் உள்ளுக்குள் நீருடன் ஆட்டி பார்க்கும் போது சத்தம் எழுப்பி அந்த குறும்பு காரனின் தலையை ஞாபக படுத்தியது
அன்றில் இருந்து தேங்காயை குறும்பு காரனின் தலை -கோன் பின் (Gon-bin) அவர்களது மொழில் கூற தொடங்கியதாக மியான்மாரி ஆதிவாசிகளின் கதை கூறுகிறது