GURU NANAK DEV JI TAMIL STORY – True Profitable Transaction- குருநானக் ஜி:- குருநானக் ஜி சிறுவனாக இருந்த சமயம் அவரோட அப்பா குருநானக்கையும் அவரோட நண்பர் பாய் பாலா வாயும் கூப்பிட்டாரு
நீங்க அதிகமா மக்களோட பழகனும்னா நீங்க வியாபாரம் செஞ்சீங்கன்னாதான் முடியும் , மக்களோட பழக்க வழக்கங்களை நீங்க புரிஞ்சிகிட்டேங்கன்னா தான் வாழ்க்கைல முன்னேற அது உறுதுணையா இருக்கும்னு சொன்னாரு
200 ரூபாய் அவுங்க ரெண்டு பேருக்கும் கொடுத்து பக்கத்துக்கு சந்தைக்கு போயி ஏதாவது வாங்கி வியாபாரம் பண்ணுங்கன்னு சொல்லி அனுப்புச்சாறு
அப்ப அங்க ஒரு வழிப்போக்கர்கள் சோர்வா மரத்தடில உக்காந்து இருக்குறத பாத்தாரு குருநானக்
எந்த ஒரு சிந்தனையும் இல்லாம அந்த பணத்த அவுங்க கிட்ட கொடுத்தாரு
அதுக்கு அவுங்க தம்பி நீங்க எங்களுக்கு பண உதவி செய்ய வேண்டாம் எங்களுக்கு உணவுக்கு ஏற்பாடு செஞ்சீங்கன்னா போதும்னு சொன்னாங்க
உடனே நானக் ஜி பக்கத்துக்கு விடுதில போய் அவுங்களுக்கு உணவு வாங்கி கொடுத்தாரு
வீட்டுக்கு திரும்புன அவரு கிட்ட அவுங்க அப்பா கேட்டாரு என்ன நடந்ததுன்னு
அதுக்கு நானக் ஜி சொன்னாரு எனக்கு என்னைக்கு சில வழிப்போக்கர்களுக்கு உதவுற வாய்ப்பு கிடைச்சது அப்படின்னு சொன்னாரு
அதுக்கு அவுங்க அப்பா சொன்னாரு அந்த வைப்ப நீங்க பயன்படுத்துனீங்களா அப்படின்னு கேட்டாரு
உற்சாகமான அவுங்க ஆமாம்னு சொன்னாங்க,இத கேட்ட அவுங்க அப்பா சொன்னாரு நன்று ,ஒருத்தருக்கு உதவணும்னு கடவுள் நினச்சா அவரே வரமாட்டாரு உங்கள மாதிரி நல்ல எண்ணம் உள்ளவர்களா அவுங்ககிட்ட அனுப்புவார்
அந்த வாய்ப்ப நீங்க பயன்படுத்துனீங்கன்னா கடவுளோட வேலைய நீங்க செஞ்சமாறின்னு சொன்னாரு