பழமொழி கதைகள் – God Dream Kids Story in Tamil – சுவர் இல்லாமல் சித்திரமில்லை

பழமொழி கதைகள் – God Dream Kids Story in Tamil – சுவர் இல்லாமல் சித்திரமில்லை :- ஒரு ஊருல ஒரு இளைஞன் இருந்தான் , அவன் எப்பவும் நல்லபடியா இருக்கணும்னு கடவுள வேண்டிகிட்டே இருப்பான்

பழமொழி கதைகள் - God Dream Kids Story in Tamil - சுவர் இல்லாமல் சித்திரமில்லை

ஒருநாள் கடவுள் அவன் கனவுல வந்தாரு

நீ பணக்காரனை ஆகணும்பா உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற பாறையை உன் கையாலேயே நகத்து அப்படினு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு

தன்னோட கனவு ரொம்ப உண்மையா இருக்குறமாதிரி இருந்ததால மறுநாள் காலைல அந்த பாறையை நகத்த பாத்தான்

எவ்வளவு முயற்சி பண்ணியும் அவனால அந்த பாறைய நகத்த முடியல

என்னதான் அந்த பாறைய அவனால நகத்த முடியளானாலும் அவன் முயற்சியை விடல தினமும் அந்த பாறையை நகத்த முயற்சி பண்ணியும் அவனால முடியல

கொஞ்ச காலத்துக்கு அப்புறமா கடவுள் மீண்டும் ஒருநாள் அவன் கனவுல வந்தாரு

அப்ப அந்த இளைஞன் கேட்டான் நீங்க சொன்ன மாதிரி அந்த பாறைய நகத்தி பாத்தேன் என்னால அத நகத்த முடியல அப்படின்னு சொன்னான்

அத கேட்ட கடவுள் சொன்னாரு சுவர் இல்லாம சித்திரம் இல்லை , இப்ப உன்னோட உடம்ப பாரு

தினமும் நீ செஞ்ச முயற்சியால உன்னோட உடம்னு அந்த பாற மாதிரி மாறிடுச்சு

நீ இப்ப எந்த வேலையையும் சுலபமா செய்ய முடியும் ,உன்னோட உழைப்பை நீ பேருக்கு நீ இந்த ஊர்லயே பெரிய பணக்காரனை மாறிடுவேன்னு சொல்லிட்டு மறைஞ்சுட்டாரு

பழமொழி : சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்