Go By Heart -பணக்காரருக்கு மரண தேவதையும்:-ஒரு நகரத்துல ஒரு பணக்காரர் இருந்தாரு ,அவருக்கு நிறைய தொழில் இருந்துச்சு,பெரிய பெரிய மாளிகைகள் இருந்துச்சு , ஒவ்வொருநாளும் நிறய பணம் அவர் சம்பாதிச்சாரு.

அதனால அவரு ரொம்ப சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்தாரு ,கொஞ்ச காலத்துக்கு அப்புறமா ஒருநாள் காலைல கண்விழிக்கும் போது அவர் முன்னாடி மரண தேவதை நின்னுகிட்டு இருந்தாங்க.

உங்களோட வாழ்வு முடிஞ்சது நீங்க இப்ப என்னோட வாங்கனு அந்த மரண தேவதை கூப்பிட்டுச்சு ,உடனே அந்த பணக்காரர் என்னோட சொத்துக்களை எல்லாத்துலயும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு இன்னும் கொஞ்சநாள் என்ன வாழ விடுங்கனு கேட்டாரு அந்த பணக்காரர்.

அதுக்கு அந்த தேவதை மறுக்கவே ,தன்னோட சொத்துக்கள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஒரு மாசம் மட்டும் தன்னை வாழ விட சொன்னாரு.
அதுக்கும் அந்த தேவதை மறுத்திடுச்சு ,உடனே ஒருநாளாவது கொடுக்கும்படி கேட்டாரு அவரு ,அதுக்கும் தேவதை மறுப்பு சொல்லிடுச்சு
உடனே ஒரே ஒருநிமிடம் தனக்கு உயிர் கொடுக்க சொல்லி கெஞ்சுனாரு ,உடனே இறக்க பட்ட அந்த மரண தேவதையும் ஒரு நிமிஷம் அவகாசம் கொடுத்துச்சு.

உடனே அந்த பணக்காரர் தன்னோட குடும்பத்துக்கு ஒரு லெட்டர் எழுத்துனாரு ,அதுல வாழ்க முழுசும் சம்பாதிச்ச பணத்தால என்னால ஒரு நிமிஷம் கூட மரணத்த தள்ளி போட முடியல அதனால எப்பவும் பணத்து பின்னாடி போகாம வாழ்க்கை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கனு அதுல எழுதி வச்சிட்டு மரண தேவதை கூட போய்ட்டாரு அந்த பணக்காரர்