Four Friends and the Lion – படித்தால் மட்டும் போதுமா – Tamil Moral Story:- ஒரு ஊருல சத்யானந்த், வித்யானந்த்,தர்மானந்த,சிவானந்த்னு நான்கு நண்பர்கள் இருந்தாங்க
நாலு பேரும் ஒருநாள் பக்கத்து ஊருல இருக்குற சாமியார்கிட்ட போயி மந்திர கலைகள் கத்துகிட்ட போனாங்க
அந்த சாமியார் நல்லா படிக்குற பசங்களுக்குத்தான் என்னோட அறிய மந்திரங்கள சொல்லி தருவேன்னு சொன்னாரு
அன்னைல இருந்து தினமும் அந்த நான்கு நண்பர்களும் நல்லா படிச்சாங்க ஆனா சிவானந்த்க்கு மட்டும் படிப்பு கொஞ்சம் சுமாராத்தான் இருந்துச்சு
பல வருஷங்கள் கழிச்சு சத்யானந்த்துக்கு எலும்புகளை ஒண்ணுசேக்குற வித்தையையும், வித்யானந்த்துக்கு எலும்புக்கு தோல் கட்டுர வித்தையையும்,தர்மானத்துக்கு உயிர் கொடுக்குற வித்தையையும் சொல்லி கொடுத்தாரு அந்த சாமியார்
படிப்புல கவனம் இல்லாத சிவானந்த வேலை செய்ய சொல்லி அவனுக்கு ஒண்ணுமே கத்து கொடுக்காம விட்டுட்டாரு
படிப்பு முடிஞ்சதும் நாலு நண்பர்களும் தங்களோட வீட்டுக்கு போக காட்டுவழியே நடக்க ஆரம்பிச்சாங்க
அப்பத்தான் அங்க ஒரு சிங்கத்தோட எலும்புகள் கிடைக்கிறத பாத்தாங்க
உடனே சத்யானந்த் அந்த எலும்புகளை ஒண்ணுசேர்த்தான் , அந்த எலும்புகளுக்கு வித்யானந்த் தோல் கொடுத்தான்,பக்கத்துல இருந்த தர்மானந்த் உயிர் கொடுத்தான்
இத எல்லாம் பாத்துகிட்டு இருந்த சிவானந்த் தன்னோட உடல் வலிமையால அங்க இருந்த பெரிய மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான்
உயிர் பெற்ற சிங்கம் முதல்ல அந்த மூணு பேரையும்தான் கொன்னுச்சு
அவசர பட்டு தன்னோட நண்பர்கள் செய்த தவற எண்ணி கவலை பட்டன் சிவானந்த்
நீதி : படித்தால் மட்டும் போதாது அந்த படிப்பினால் தமது அறிவை வளர்த்து கொள்வதே சாலசிறந்தது