புகழ்ச்சியை விரும்பாதவர்களின் பெயர்கள்தாம் நாட்டில் இன்றளவும் நிலைத்து நின்று மக்களால் பேசப்படுகின்றன. வரலாற்றிலும் எழுதப்பட்டுள்ளன
உலகில் உண்மையாய் உழைத்து புகழ் பெற்றவர்கள் அனைவருமே புகழ்ச்சியை விரும்பாதவர்கள்தாம்.
அவர்களில் ஒருவர் உலகப் புகழ் பெற்ற ஃபோர்டு கார் தயாரிப்பாளரான ஹென்றி ஃபோர்டு
அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஒரு சமயம் அவர் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்றிருந்தார். அங்கு பல இடங்களுக்குச் சென்று வர அவர் ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்தினார்
அந்தக் காலத்தில் ஃபோர்டு கார்களைப் போல ரோல்ஸ் ராய்ஸ் கார்களும் புகழ் பெற்றிருந்தன.
ஆனாலும் ஃபோர்டு கார்களை விட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இரண்டாம் இடத்தில்தான் இருந்தன
முதல் தரமான ஃபோர்டு கார்களைத் தயாரிக்கும் ஹென்றி ஃபோர்டு, இரண்டாம் இடத்திலிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்கிறாரே என்று நினைத்துப் பெரிதும் வியந்தனர் பிரிட்டிஷ் மக்கள்
ஒரு நாள் இரவு இங்கிலாந்து மன்னர் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் ஃபோர்டு கலந்து கொண்டார்
அப்போது மன்னர் அவரைப் பார்த்து, “மிஸ்டர் ஃபோர்டு! நீங்கள் உங்கள் தயாரிப்பான ஃபோர்டு காரைப் பயன்படுத்தாமல், ரோல்ஸ் ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறீர்களே. அதற்கு என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா? என்று கேட்டார்
அதற்கு ஹென்றி ஃபோர்டு, “நிச்சயமாக அரசே எனது சொந்த உபயோகத்திற்காக ஒரு ஃபோர்டு கார் வேண்டுமென்று எனது மேனேஜரிடம் சொல்லி யிருந்தேன். ஆனால் ஒவ்வொரு காரும் தயாராகி வெளியே வருவதற்கு முன்னாலேயே விற்பனையாகி விடுகிறது. எனது மேனேஜர் மிகவும் நேர்மையானவர் அவர் முதலில் வாடிக்கையாளர்களுக்குத்தான் கார்களை விற்பனை செய்வார். அவர்களைத் திருப்திப்படுத்துவது தான் அவரது முதல் நோக்கம் அந்த சமயத்தில் முதலாளியே வந்து கேட்டால் கூட காரைத் தரமாட்டார் அதனால்தான் என் சொந்த உபயோகத்திற்கு இன்னும் ஃபோர்டு கார் கிடைக்கவில்லை. அதனால்தான் ரோல்ஸ்
ராய்ஸ் காரைப் பயன்படுத்துகிறேன்” என்றார்
ஃபோர்டு கார் கம்பெனி மானேஜரின் கடமை உணர்ச்சியையும் அவருக்கு செவிமடுத்து ஒரு சாதாரண
மனிதர் போலவே நடந்து கொள்ளும் உ உரிமையாளர் மென்றிப்போர்டையும் நினைத்துப் பெரிதும் வியந்தார் இங்கிலாந்து மன்னர்..
இப்படி ஒரு முதலாளியையும் மேனேஜரையும் இந்த உலகத்தில் வேறு எங்காவது பார்க்க முடியுமா