தங்க மீனும் மீனவரும் – Fisherman and a Golden Fish-Moral Story For Kids:- ஒரு ஏரிக்கு பக்கத்துல ஒரு மீனவர் வாழ்ந்துகிட்டு வந்தாரு

அவரு தினமும் ஏரிக்கு போயி மீன்பிடிப்பாரு ,அந்த மீன சந்தையில வித்து தன்னோட மனைவிக்கு பிடிச்சத வாங்கிட்டு வருவாரு

ஆனா அவரோட மனைவி ரொம்ப பேராசை காரியா இருந்தாங்க ,எவ்வளவு பொருள் வாங்கிட்டு வந்தாலும் அதிகமா வேணும்னு கேட்டுகிட்டே இருப்பாங்க

ஒருநாள் அந்த மீனவர் மீன் பிடிக்க போனாரு ,அப்ப அவரோட தூண்டில்ல ஒரு தங்கமீன் மாட்டுச்சு

மீனவரே மீனவரே ,என்ன விட்டுடுங்க ,நான் உங்களுக்கு ஒரு நல்ல நண்பனா இருப்பேன்னு சொல்லுச்சு அந்த தங்க மீன்
அந்த மீன் பேசுனத கேட்டதும் மீனவருக்கு ஆச்சர்யமா போச்சு ,உடனே அவரு அந்த மீனை தூண்டில்ல இருந்து விடுவிச்சாரு

இந்த விஷயத்தை தன்னோட மனைவிக்கு சொன்னாரு ,அதுக்கு அவுங்க ரொம்ப கோபப்பட்டாங்க

பேசுற தங்க மீன் கிட்ட ஒரு நல்ல மாடி வீடு கேட்டிருக்கலாம்ல ஏன் அத போக விட்டீங்கனு சத்தம் போட்டாங்க
உடனே ஏரிக்கு போன அந்த மீனவர் அந்த மீன கூப்பிட்டாரு ,உடனே தண்ணிக்கு மேல வந்தது அந்த தங்க மீன்

தங்கமீனே தங்க மீனே எனக்கு ஒரு நல்ல மாளிகை வீடு வேணும்னு கேட்டாரு ,உடனே சரினு சொல்லி ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன்
வீட்டுக்கு வந்து பார்த்தா ,அவரோட வீடு ஒரு பெரிய மாளிகையா மாறியிருந்துச்சு

ஆனா அவரோட மனைவிக்கு ஆசை அடங்கல ,நீங்க திரும்ப போயி நமக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேளுங்கன்னு சொன்னாங்க

உடனே ஏரிக்கு வந்து தனக்கு ஒரு அரண்மனை வேணும்னு கேட்டாரு அந்த மீனவர்

உடனே அதுக்கும் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன் ,வீட்டுக்கு திரும்பி வந்து பாத்தா அவரோட வீடு அரண்மனையா மாறியிருந்துச்சு

பேராசை படர அந்த மனைவி சொன்னாங்க நாம் வானத்துல இருக்குற மேகத்துக்கு மேல வாழுற மாதிரி வீடு வேணும்னு கேக்க சொல்லி தொந்தரவு பன்னாங்க

திரும்பவும் தங்க மீன்கிட்ட வந்து ,தன்னோட மனைவி கெட்டத கேட்டாரு ,அதுக்கும் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு தங்க மீன்
வீட்டுக்கு வந்து பாத்தா ,வீடு இருந்த இடத்துல ஒண்ணுமே இல்ல,பயந்து போன அந்த மீனவர்

ஏரிக்கு ஓடிவந்து தங்க மீன் கிட்ட நடந்தத சொன்னாரு
அதுக்கு அந்த மீன் சொல்லுச்சு நீங்கதான மேகத்துக்கு மேல வீடு வேணும்னு கேட்டீங்க அதான் வீடு பறந்து போயி மேகத்துக்கு மேல போய்டுச்சுன்னு சொல்லுச்சு அந்த தங்க மீன்

இத கேட்ட மீனவருக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,அப்பத்தான் அவரு கேட்டாரு எனக்கு பேராசை இல்லாத மனைவி வேணும்னு
இப்பதான் உங்களுக்கு வேணும்ங்கிறத கேக்குறீங்கன்னு சொல்லி ஒரு மந்திரத்தை சொல்லுச்சு அந்த மீன்

வீட்டுக்கு வந்த மீனவருக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு ,அவரோட பழைய வீடு அங்க இருந்துச்சு ,ஆனா எப்பவும் சிடு சிடுன்னு இருக்குற அவரோட மனைவி
சிரிச்சிகிட்டே அவர வரவேத்தாங்க,தன்னோட மனைவி நல்ல படியா திரும்பி வந்ததோட ,நல்ல பெண்ணா மாரி வந்தத பார்த்த அந்த மீனவருக்கு ரொம்ப சந்தோசம்
அதுக்கு அப்பறமா அந்த தங்க மீன் கிட்ட எந்த உதவியும் கேட்க்காம நல்ல நண்பனா இருந்தாரு அந்த மீனவர்
SUPER