Fish Story for Kids in Tamil – மீன் கதைகள் :- ஒரு குளத்துல வித விதமான மீன்கள் வாழ்ந்துகிட்டு வந்ததுங்க.
அந்த குளம் காட்டுக்குள்ள இருக்குறதால அந்த மீன்களுக்கு எந்த விதமான ஆபத்து வர்றது இல்ல
அதனால அந்த மீன்கள் எப்பவும் சந்தோசமா இருந்ததுங்க
தண்ணில இருந்து குதிச்சு குதிச்சு விளையாடும் அந்த மீன்கள்
ஒரு நாள் அந்த காட்டுக்கு வேட்டையாட வந்த வேட்டைக்காரங்க அந்த மீன்கள் குதிச்சு விளையாடுறத பாத்தாங்க
அடடா இந்த குளத்துல அதிகமான மீன்கள் இருக்கும் போலயேனு சொல்லி வியந்தாங்க
இன்னைக்கு ரொம்ப லேட்டாகிட்டதால நாளைக்கு காலைல வந்து இந்த மீன்களை பிடிக்க வலை போடலாம்னு பேசிக்கிட்டாங்க
கரையோரமா நீந்திக்கிட்டு இருந்த சில மீன்கள் அவுங்க பேசுனத கேட்டாங்க
இத உடனே எல்லா மீன்களுக்கும் தெரிய படுத்துனாங்க, ஆனா எல்லா மீனும் அத நம்பள
சில மீன்கள் எனக்கு தெரிஞ்சு ரொம்ப காலமா இந்த குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்ல அதனால நான் இந்த குளத்தை விட்டு வரமாட்டேன்னு சில மீன்கள் சொல்லுச்சுங்க
ஆனா சில மீன்கள் மட்டும் ராத்திரியோட ராத்திரியே சின்ன பாதைவழியா பக்கத்துல இருக்குற அடுத்த குளத்துக்கு போச்சுங்க
மறுநாள் காலைல அங்க வந்த வேட்டைக்காரங்க அந்த குளத்துல வலைய விரிச்சு அங்கேயே இருந்த மீன்களை மட்டும் பிடிச்சாங்க
அடடா நமக்கு ஆபத்து இருக்குன்னு சொன்ன மீன்களோட பேச்ச கேக்காம இந்த ஆபத்துல சிக்கிட்டமேன்னு நினச்சு வறுத்த பட்டுச்சுங்க அந்த மீன்கள்