Duck Soup-Mullah Nasruddin Story in Tamil – வாத்து சூப் :- முல்லா ஒருநாள் பக்கத்து ஊருக்கு பயணம் போனாரு.
பயணம் போகுறப்ப சாப்பிடறதுக்கு ரெண்டு ரொட்டி துண்டு மட்டுமே கையில கொண்டுபோனாரு ,போகுற வழியில சாப்பிடும்போது கூட குடிக்கிறதுக்கு ஏதாவது ஏற்ப்பாடு பண்ணிக்கிடலாம்னு நினைச்சாரு
ஆனா அவரு போகுற வழியில எந்த கடையோ சத்திரமோ இல்ல அதனால ரொட்டி தொட்டு சாப்பிடறதுக்கு டீயோ ,சூப்போ அவருக்கு கிடைக்கல
அதனால தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சாரு ,ஒரு குளத்து கிட்ட வந்த முல்லா அங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க நினைச்சாரு
அந்த இடம் ரொம்ப அமைதியாவும் அழகாவும் இருந்ததால ,தான் கையில கொண்டுவந்த ரொட்டி துண்டை அங்கேயே சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம்னு நெனச்சாரு
அப்பத்தான் மூணு வாத்துங்க அந்த குளத்துல நீந்திக்கிட்டு இருக்குறத பார்த்தாரு ,அடடா இந்த வாத்துக்கல பிடிச்சா நிறைய சூப் வச்சு ரோட்டிய தொட்டு சாப்பிடலாமேன்னு நினைச்சாரு
உடனே கரையில இருந்தே அந்த வாத்த பிடிக்க பார்த்தாரு , எவ்வளவு முயற்சி செஞ்சும் அவரால பிடிக்க முடியல ,உடனே முழுசா குளத்துக்குள்ள இறங்கி வாத்த பிடிக்க முடியல
ரொம்ப சோர்ந்துபோன முல்லா தன்னோட முயற்சியை கைவிட்டு கரைக்கு ஏறுனாரு , கொஞ்ச நேரம் ஓய்வெடுத்த முல்லா தான் கொண்டு வந்த ரொட்டியை அந்த குளத்து தண்ணியில முக்கி முக்கி சாப்பிட ஆரம்பிச்சாரு
அத அந்த பக்கமா பயணம்போன மத்த பயணிங்க கவனிச்சு ஏன் இப்படி குளத்து தண்ணியில ரொட்டி தொட்டு சாப்பிடறீங்கன்னு கேட்டாரு
பொதுவா ஒரு பாத்திரத்துல நிறய தண்ணி அதுல வாத்து ,அத தொட்டு திங்க ரொட்டி இதுதான் நல்ல காலை சாப்பாடு ,அதே மாதிரி பாத்திரத்துக்கு பதிலா இந்த பெரிய குளம் குளம் நிறய தண்ணி அதுல மிதக்கிற வாத்து ,என்கிட்ட ரொட்டி துண்டு இப்படி எல்லாமே இருக்கு
நான் முயற்சி செஞ்சு வாத்து சூப் செஞ்சு சாப்பிடலாம்னு பார்த்தேன் ,அது முடியாதுனு தெரிஞ்சு போச்சு ,அதனால வாத்து சூப் குடிச்ச திருப்திய மட்டும் நான் மனசால அடஞ்சிகிட்டு இருக்கேன்னு சொன்னாரு
அப்பத்தான் அந்த பயணிகளுக்கு புரிஞ்சது ஒரு செயலை திறம்பட செஞ்சும் அது தோல்வியில் முடிஞ்சாலும் ,சோர்ந்து போக கூடாது அந்த செயல நல்லபடியா செஞ்சோம்னு ஒரு திருப்தி இருந்தாலே நமக்கு வெற்றி தான்னு