Democratic Forest Tamil Kids Story-ஜனநாயக காடு சிறுவர் கதை :- ஒரு காட்டு பகுதியில ஒரு முயல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.
சுறுசுறுப்பான அந்த முயல் ஒருநாள் காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு
அங்க எல்லா மிருகங்களும் உக்காந்து பேசிகிட்டு இருந்துச்சுங்க
அப்பத்தான் அந்த முயலுக்கு புரிஞ்சது தங்களோட அரசரான சிங்கத்துக்கு ரொம்ப வாசகிட்டதால புது அரசர தேர்ந்தெடுக்க இந்த மிருகங்கள் எல்லாம் முடி பண்ணிருக்குங்கனு.
ஆனா யார கட்டோட அரசரா தேர்ந்தெடுக்குறதுனு அவுங்களால முடிவு எடுக்க முடியல
உடனே சிங்கம் சொல்லுச்சு நாளைக்கு ஒரு போட்டி வைப்போம், எல்லாரும் அவுங்ககிட்ட இருக்குற உயர்ந்த பொருளை கொண்டு வாங்க
யாருகிட்ட இருக்குற பொருள் ரொம்ப உயர்ந்ததுனு பார்த்து அவுங்களையே அரசரா அறிவிக்கலாம்னு சொல்லுச்சு சிங்கம்.
வீட்டுக்கு வந்த முயலுக்கு அவுங்க தாத்தா வைத்தியத்துக்கு பயன்படுத்துற மயக்க மருந்து கண்ணுல பட்டுச்சு
அடடா வலி இல்லாம இருக்க நம்ம தாத்தா கண்டுபிடிச்ச இந்த மயக்க மருந்துதான் சிறந்ததுனு அந்த பாட்டில எடுத்துட்டு போட்டிக்கு போச்சு அந்த முயல்
எல்லா மிருகங்களும் தங்களுக்கு உயர்ந்த பொருட்களை கொண்டு வந்திருந்தாங்க
அப்ப திடீர்னு நிறய வேட்டைக்காரங்க அங்க வந்தாங்க ,இத பார்த்த அந்த முயல் ,நண்பர்களே நாம இப்ப இங்க இருந்து தப்பிக்கிறது கஷ்டம்
எப்படி முயற்சி செஞ்சாலும் யாரவது மாட்டிக்குவோம் அதனால் இந்த மயக்க மருந்தை குடிச்சிட்டு எல்லாரும் படுத்துடுங்க ,செத்த மிருகங்களை வேட்டைக்காரங்க பார்த்தா குழப்பமாகி திரும்பி போறதுக்கு வாய்ப்பிருக்குனு சொல்லுச்சு
உடனே எல்லா மிருகங்களும் அந்த மருந்தை குடிச்சிட்டு மயக்கம் போட்டு விழுந்திருச்சுங்க ,
இத பார்த்த வேட்டைக்காரங்க இந்த இருக்குற மிருகங்களுக்கு எல்லாம் ஏதோ பெரிய நோய் வந்திருச்சு போல அதனால் எல்லாம் செத்துப்போச்சுங்க ,இத எடுத்துட்டு போனா கூட நமக்கு உபயோகம் கிடையாதுன்னு சொல்லிட்டு திரும்பி போய்ட்டாங்க
மயக்கம் தெளிஞ்சு எந்திரிச்ச எல்லாரும் முயலயே அரசரா அறிவிச்சாங்க
ஆனா கொஞ்ச நாளுக்கு அப்புறம் தான் இந்த அரசர் பதவிக்கு தகுதி இல்லைங்கிறத எல்லாருக்கும் சொல்லுச்சு முயல்
உடனே எல்லாரையும் கூப்பிட்டு இனிமே இந்த காடு ஜனநாயக காடு ,இங்க இருக்குற வொவ்வொருத்தரும் அரசரோட செயல் பாடுகளை பிரிச்சி தனினியா செய்யணும்னு சொல்லுச்சு
உடனே சிங்கம் ,புலி யானை மாதிரி மிருகங்கள் காட்ட பாதுகாக்கவும் ,மாடு ஆடு ,நரி போன்ற விலங்குகள் விவசாயமும் ,மத்த பறவைகள் காட்ட சுத்த படுத்தவும் ஆரம்பிச்சதுங்க
அதுக்கப்புறம் அந்த ஜனநாயக காட்டுல அரசர் தேவைப்படவே இல்ல