Coin For Someone Needy – சாமியாரின் சாமர்த்தியம் :- ஒரு நாட்டுல ஒரு சாது நடந்து போய்கிட்டு இருந்தாரு
அவருக்கு கீழ கிடந்து ஒரு நாணயம் கிடைச்சது, பிச்ச எடுச்சு வாழ்க்க நடத்துற அவருக்கு அந்த நாணயம் தேவ படல
அதனால யாருக்கு தேவபடுதோ அவருக்கு இந்த நாணயத்த கொடுக்கணும்னு அவரு நினைச்சாரு
அந்த நாட்டுல இருக்குற எல்லாரையும் பாத்துகிட்டே நடந்து போனாரு அந்த சாது
அந்த நாட்ல இருந்த எல்லாரும் ரொம்ப சந்தோசமா திருப்தியான வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருந்தாங்க
அதனால யாருக்குமே அந்த நாணயம் தேவைப்படல
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா அந்த நாட்டு ராஜா படையோடு அந்த பக்கம் வந்தாரு
அந்த சாதுவ பாத்த ராஜா படையோடு அவரு கிட்ட வந்து நின்னரு
சாது கேட்டாரு எங்க போறீங்கன்னு கேட்டாரு
அதுவா நான் பக்கத்துக்கு நாட்டு மேல படையெடுத்து போறேன்
அந்த நாட்ட ஜெயிச்சா எனக்கு பண தேவையே இருக்காதுன்னு சொன்னாரு
உடனே அந்த சாது தன்னோட வச்சிருந்த நாணயத்த எடுத்து அந்த ராஜாவுக்கு கொடுத்தாரு
என்னனு குழப்பமா பாத்த ராஜாவுக்கு சாது பதில் சொன்னாரு
இந்த நாணயம் கீழ கிடைச்சது இந்த நாணயத்த தேவ படுற ஒருத்தருக்கு கஷ்டப்படுற ஒருத்தருக்கு கொடுக்கணும்னு நினச்சேன்
ஆனா உங்க நாட்ல யாருமே கஷ்டப்படல சந்தோஷமாவே இருக்காங்க
நீ மட்டும்தான் உன்கிட்ட இருந்தது போதாதுன்னு அடுத்த நாட்டு மேல படையெடுக்குற
நீதான் இந்த நாட்லயே ஏழைனு சொன்னாரு
இத கேட்ட ராஜா தன்னோட தவற உணர்ந்து தன்னோட படை எடுப்ப நிறுத்துனாரு