Camel And Baby Tamil Kids Story – ஒட்டகமும் அதன் குட்டியும் :- ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தார் அவருக்கு மிருகங்கள்னா ரொம்ப பிடிக்கும்

அதனால அரண்மனைக்கு பக்கத்துலயே ஒரு மிருக காட்சி சாலை அமைச்சாரு
உலகத்துல உள்ள மிருகங்கள் எல்லாத்தையும் பிடிச்சிட்டு வந்து அந்த ஜூல அடைச்சு வச்சாரு
ஒருநாள் சாயந்திரம் மெதுவா நடை பயிற்சி செஞ்சுகிட்டு இருந்தார் அந்த ராஜா
அப்ப ஒரு ஒட்டகமும் ஒட்டகத்தோட குட்டியும் பேசுறத கேட்டாரு

ஒட்டகத்தோட குட்டி அவுங்க அம்மாகிட்ட கேட்டது அம்மா நமக்கு எதுக்கு முதுகுல இந்த குமிழ் இருக்குன்னு
அதுவா நாம பாலைவனத்துல நடக்குறப்ப நமக்கு தண்ணி தேவைப்படும் அத சேமிச்சு வைக்கத்தான் இந்த குமிழ் அப்பிடின்னு சொல்லுச்சு
உடனே அந்த குட்டி நமக்கு எதுக்கு வட்டமான பாதம் அப்படின்னு கேட்டுச்சு
நாம மணல் பரப்புல நடுக்குறப்ப நமக்கு உதவுறதுக்குத்தான் இப்படி இருக்குன்னு சொன்னது அந்த ஒட்டகம்

உடனே திரும்ப அந்த குட்டி கேட்டுச்சு நமக்கு எதுக்கு இந்த தடிமனான கண் இமைகள்னு கேட்டுச்சு

அதுவா நாம மணல் புயல் அடிக்கிறப்ப நம்ம கண்ண பாதுகாக்க இந்த அமைப்பு நமக்கு கடவுள் கொடுத்தாரு அப்படின்னு சொல்லுச்சு
எனக்கு ஒன்னு மட்டும் புரியல நாம பாலைவனத்துல வாழுறதுக்கு எல்லா அமைப்புகளையும் கடவுள் நமக்கு கொடுத்திருக்காரு ஆனா நாம இந்த மிருக காட்சி சாலையில என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்னு கேட்டுச்சு

இத கேட்ட ராஜாவுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு, அடடா நம்ம சுய லாபத்துக்காக இந்த மிருகங்களை அதுங்களோட வாழ்விடத்துல இருந்து பிடிச்சிட்டு வந்து இப்படி தப்பு பண்ணிடோமேனு வறுத்த பட்டர்
மறுநாளே எல்லா மிருகங்களையும் அவுங்க அவுங்க இடத்துல கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டாரு அந்த ராஜா