அப்பா மகன் தாத்தா – Boy,Father,Granfather Moral Story For Kids-ஒரு ஊருல ராஜன்னு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான்.
அவனுக்கு அப்பாவும் தாத்தாவும் மட்டும்தான்,அவுங்க அம்மா கொஞ்ச நாளுக்கு முன்னாடி இறந்து போயிட்டதால அவுங்க வீட்டுல பெண்களே இல்லை
வீட்டு வேலைகளை அவனும் அவுங்க அப்பாவும் சேர்ந்து செய்வாங்க ,அவுங்க தாத்தாவுக்கு ரொம்ப வயசாகிட்டதால அவரால வேலை செய்ய முடியல.
ராஜனோட அப்பா அவரோட அப்பாவ திட்டிகிட்டே இருப்பாரு ,ஒரு நாள் அந்த தாத்தா தன்னோட இரும்பு தட்ட கீழ போட்டுட்டாரு,அந்த தட்டு கீழ விழுந்து ரொம்ப பெரிய சத்தத்த எழுப்புச்சு , உடனே ராஜனோட அப்பா அவர ரொம்ப திட்ட ஆரம்பிச்சாரு.
இத பாத்த ராஜனுக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,வயசு முதிர்ச்சியால தன்னோட தாத்தா செஞ்ச இந்த தவற அப்பா மன்னிக்காம இப்படி திட்டுறது அவனால தாங்கிக்க முடியல.
வீட்டுக்கு வெளிய வந்த அவன் ஒரு மரத்துண்ட எடுத்து தட்டு செய்ய ஆரம்பிச்சான் ,வெளிய வந்த அவனோட அப்பா ராஜன பாத்து என்ன செய்யிறனு கேட்டாரு
அதுக்கு ராஜன் பிற்காலத்துல உங்களுக்கும் வயசாகும் அப்ப நீங்க இரும்பு தட்ட கீழ போட்டிங்கன்னா அது ரொம்ப சத்தத்தை ஏற்படுத்தும் அப்ப எனக்கு உங்க மேல வெறுப்பு வரலாம்
அதனால இப்பவே உங்களுக்கு மர தட்டு செஞ்சு வச்சிடுறேனு சொன்னான் ,அவனோட வாதத்தை கேட்ட அந்த அப்பா தான் செய்த தவறை புரிஞ்சிக்கிட்டாரு ,எப்படியும் ஒருநாள் தனக்கும் வயசாகும் அப்ப தான் தான்னோட அப்பாவ நடத்துற மாதிரி தன்னையும் தன் பையன் நடத்துனா என்னவாகும்னு அவருக்கு யோசனை வந்துச்சு
சூசகமா தன்னோட தவறை சுட்டிகாட்டுன ராஜனை அவுங்க அப்பா ரொம்ப பாராட்டுனாரு ,இனிமே தன்னோட தந்தையை மரியாதையை குறைவா நடத்த மாட்டேனு வாக்குறுதியும் கொடுத்தாரு