Birbals Help – Seer of Lime-Akbar Birbal Tamil Stories:-அக்பருக்கு பணிவிடை செய்ய ரெண்டு உதவியாட்கள் எப்பவுமே அவர் பக்கத்துல இருப்பாங்க.
அவுங்க ரெண்டுபேரும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க .

ஒருநாள் அக்பர் வெத்தலை கேட்டாரு ,அக்பருக்கு எப்பவும் வெத்தலை கொடுக்குற உதவியால் வெத்தலை மடிச்சு வச்சுக்கிட்டு இருக்கிறப்ப இன்னொரு உதவியால் அவருக்கு தெரியாம அதுல நிறய சுண்ணாம்ப தடவி வச்சுட்டாரு
அத சாப்பிட அக்பருக்கு வாய் பொத்து போச்சு ,போயி ரெண்டு வாளி சுண்ணாம்பு வாங்கிட்டு வானு சொல்லி அனுப்பிச்சாரு ,இத கேட்ட அந்த கெட்ட எண்ணம் பிடிச்ச உதவியாலுக்கு சந்தோசம் ,இன்னைக்கு அந்த நல்ல உதவியாலுக்கு பெரிய தண்டன கிடைக்க போகுதுனு நினைச்சாரு

ஆனா அந்த நல்ல உதவியால் நேரா பீர்பால போய் பார்த்தாரு ,நடந்தத கேட்ட பீர்பால் ஒரு வாளியில சுண்ணம்பும் இன்னொரு வாளியில வெண்ணையும் கொண்டுவந்து கலக்கி கொடுத்து அனுப்புனாரு

அக்பர் கிட்ட அவர் வந்ததும் அவர அந்த சுண்ணாம்பு எல்லாத்தையும் சாப்பிட வச்சாரு அக்பர் ,ஆனா அதுல வெண்ணை கலந்ததால அவருக்கு ஒண்ணுமே ஆகல
இத பார்த்த அக்பருக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு ,
உடனே சுண்ணாம்பு கடைக்கு போய் 5 வாளி சுண்ணாம்பு வாங்கிட்டு வானு சொன்னாரு ,

அவரு போறதுக்கு முன்னாடி சுண்ணாம்பு கடைக்கு இப்ப வர்ற உதவியாளர சூடான சுண்ணாம்பு தொட்டியில தள்ளி விட சொல்லி தகவல் அனுப்புச்சாறு அக்பர் ,அது படி அந்த உதவியால் வர்றதுக்கு காத்துகிட்டு இருந்தாரு சுண்ணாம்பு கடைக்காரர்

இத கேட்ட பீர்பாலுக்கு புரிஞ்சு போச்சு ,சூடான சுண்ணாம்பு தொட்டியில அவரை முக்க போறாங்கன்னு
உடனே அந்த கெட்ட உதவியாளர கூப்பிட்டு நீ போய் சுண்ணாம்பு சூடா இருக்கானு பாத்துட்டு வானு அனுப்புச்சாறு
அந்த கெட்ட உதவியால் சுண்ணாம்பு கடைக்கு வந்ததும் அவர புடிச்சி சுண்ணாம்பு தொட்டியில தள்ளி விட்டுட்டாரு சுண்ணாம்பு கடைக்காரர் ,அவர் உடம்பு எல்லாம் பொத்து போச்சு

இத கேள்விப்பட்ட அக்பர் ,பீர்பால கூப்பிட்டு இதுக்கு நீங்கதான் காரணமான்னு கேட்டாரு

அப்பத்தான் உணமையாவே யார் சுண்ணாம்பு அதிகமா வச்சா ,யார் கெட்டவர்னு அக்பருக்கு சொன்னாரு பீர்பால்
இத கேட்ட அக்பருக்கு கோபம் கொறஞ்சு அந்த உதவியாளர மன்னிச்சிட்டாரு