Birbal and Tansen-Akbar Birbal Story in Tamil-அக்பரும் தான்சேனும் :-அக்பர் அரசவையில பிரதான பாடகரும் இசை மந்திரியுமா இருந்த தான்சேனுக்கு முதல் மந்திரியா ஆகணும்னு ஆச இருந்துச்சு
அக்பர்க்கிட்ட வந்த தான்சேன் அரசே நான் பீர்பால விட திறமைசாலி அதனால் என்னதான் நீங்க முதல் மந்திரியா நியமிக்கணும்னு சொன்னாரு
இத கேட்ட அக்பர் அப்படினா நீங்க பீர்பால விட புத்திசாலின்னு நிரூபிக்கணும் அப்படி நிரூபிச்சிட்ட உங்கள முதல் மந்திரியா நியமிக்கிறேனு சொன்னாரு
மறுநாள் பீர்பாலையும் ,தான்சேனையும் கூப்பிட்டு ஒரு போட்டி வச்சாரு ,ரெண்டு பேர்கிட்டயும் ஒரு உரை போட்ட கடிதத்தை கொடுத்து ,பக்கத்து நாட்டு அரசர்கிட்ட கொண்டுபோயி கொடுத்து ,அவர நம்ம நாட்டுக்கு விருந்துக்கு கூட்டிட்டு வர சொன்னாரு
இதுல யார் வெற்றி பெருறாங்களோ அவுங்களுக்கு தான் முதல் மந்திரி பதவின்னு சொன்னாரு
இத கேட்ட ரெண்டுபேரும் கிளம்பி பக்கத்து நாட்டுக்கு போனாங்க
அரசரை பாத்து அந்த கடிதங்களை கொடுத்தாங்க ,அந்த கடிதத்துல இந்த கடிதம் கொண்டு வர்ற ரெண்டு பேரையும் தூக்குல தொங்க விடுங்கனு எழுதி இருந்துச்சு
இத பாத்த பக்கத்து நாட்டு அரசர் அவுங்க ரெண்டு பேரையும் தூக்குல போட ஆணையிட்டாரு
இத கேட்ட தான்சேன் ரொம்ப பயந்துட்டாரு ,பீர்பால் அவர்களே இது என்ன குழப்பம் ,என் உயிரை காப்பாத்துங்க ,எனக்கு முதல் மந்திரி பதவி எல்லாம் வேணாம்னு சொன்னாரு
உடனே தான்சேன் கிட்ட பயப்படாதீங்க ,நான் சொல்லுறமாதிரி நடிங்கனு சொன்னாரு
உடனே ரெண்டு பேரும் சொன்னாங்க ,அரசே நாங்க ரெண்டு பேரும் தூக்குல தொங்க தயாராகிட்டோம் ,ஆனா என்ன முதல்ல தூக்குல போடுங்கனு சொன்னாரு பீர்பால்
உடனே தான்சேன் இல்ல இல்ல என்ன முதல்ல தூக்குல போடுங்கனு சொன்னாரு
இத கேட்ட அரசருக்கு குழப்பமா வந்துச்சு ,இது என்ன எல்லாரும் மரண தண்டனை கெடச்சா வேணாம் விட்டுடுங்கனு மன்னிப்பு கேப்பாங்க ,ஆனா இவுங்க ரெண்டு பெரும் இப்படி மாறி மாறி தங்களை முதல்ல கொள்ள சொல்ராங்கலேன்னு சந்தேக பட்டாறு
உடனே பீர்பால் கிட்ட ஏன் இப்படி கேக்குறீங்கன்னு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு ,அரசே உங்க நாட்டு மேல எங்க அரசர் போர் தொடுக்க போறாரு ,ஆனா உங்க நாடும் எங்க நாடும் ரொம்ப நட்பா இருக்கு
அதனால் அப்பாவிகளான எங்கள இங்க அனுப்பிச்சு இருக்காங்க ,எங்க ரெண்டுபேரையும் நீங்க கொன்னுட்டேங்கன்னா அக்பர் பாதுஷா சுலபமா போற ஆரம்பிச்சிடுவாருனு சொன்னாரு
இத கேட்ட அரசருக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு ,சரி அதுக்கு எதுக்கு என்ன முதல்ல தூக்குல போடுங்கனு எங்கிட்ட கேட்டீங்கனு கேட்டாரு
அதுக்கு பீர்பால் சொன்னாரு அரசே ,உங்க நாடு பெரிய நாடு ,இந்த நாட்ட பிடிச்சா அக்பருக்கு வரலாறுல இடம் கிடைக்கும் ,என்ன நீங்க முதல்ல தூக்குல போட்டேங்கன்னா என் பேருதான் அந்த வரலாறுல வெற்றிக்கு காரணம்னு வரும்னு சொன்னாரு
தான்சேனும் இதுதான் உண்மைன்னு சொல்லிட்டு,இந்த போற தவிர்க்கணும்னு எங்க நாட்டுக்கு விருந்தாளியா வாங்கனு சொன்னாரு
உடனே அவுங்களோட சேர்ந்து அக்பரை சந்திக்க வந்தாறு அந்த அரசர் ,
நடந்தத எல்லாம் கேட்டு தெரிஞ்சிகிட்ட அக்பர் சொன்னாரு ,இப்ப புரியுதா பீர்பாலோட புத்திசாலித்தனமும் ,அவரோட திறமையும்னு கேட்டாரு
அப்பத்தான் பீர்பால் தான் திறமைசாலின்னு தான்சேனும் ,பக்கத்து நாட்டு அரசரும் ,மத்த மந்திரிகளும் ஒத்துக்கிட்டாங்க