ஒரு சமயம் ஏதோ காரியமாக எட்டயபுரம் மன்னரோடு பாரதியார் சென்னைக்குப் புறப்பட்டார் அப்படிப் போகும்போது தன் மனைவி செல்லம் மானிடம், வீட்டுக்குத் தேவையான பொருள்கள் சிலவற்றை சென்னையிலிருந்து வாங்கி வருவதாகக் கூறிச் சென்றார்
இரண்டு வாரங்கள் கழித்து சென்னையிலிருந்து திரும்பிய பாரதியார் இரண்டு மூட்டைகளைக் கொண்டு வந்தார்
அவற்றில் கம்பராமாயணம் மகாபாரதம் சிலப்பதிகாரம், திருக்குறள், அகநானூறு, புறநானூறு நாலடியார், தேம்பாவணி, தேவாரம் போன்ற ஏராளமான இலக்கிய நூல்கள் இருந்தன
தன் மனைவி செல்லமாளுக்கு ஒரு புடவையை மட்டுமே கொடுத்த பாரதி, “செல்லம், மகாராஜா எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார். நம் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் சிலவற்றை வாங்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவற்றைவிட என்றும் அழியாச் செல்வங்களான இந்த இலக்கிய நூல்களை வாங்குவது மேலானது என்று தோன்றியது. ஐநூறு ரூபாயில் இந்த நூல்களை வாங்கியது போக மீதம் பதினைந்து ரூபாய் இருந்தது. அதில் இந்தப் புடவையை உனக்காக வாங்கினேன். என் மேல் தவறு ஏதாவது உள்ளதா என்று கேட்டார்
எப்பொழுது மே தன்னுள் புன்னகையைத் தேக்க வைத்திருக்கும் செல்லம்மாள், பாரதி கூறியதைக் கேட்டு மேலும் புன்னகைத்தார். “எந்தத் தவறும் இல்லை என்றார். அதைக் கேட்டு பாரதி புன்னகைத்தார்