விவசாயியும் மந்திர பூனையும்| Bedtime stories about cats:- ஒரு விவசாயி ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு,அவருக்கு கொஞ்சமா சொத்து இருந்துச்சு ,அவருக்கு மூணு மகன்கள்

அவருகிட்ட ஒரு மந்திர பூனை இருந்துச்சு ,அந்த பூனைய பத்தி யாருகிட்டயும் ஒன்னும் சொல்லாம இருந்தாரு அவரு
அந்த விவசாயி மறைவுக்கு அப்புறமா அந்த சொத்த மூணு மகன்களும் பிரிச்சிக்கிட முடிவு பண்ணுனாங்க

ஏமாளியான மூணாவது மகனுக்கு அந்த பூனைய கொடுத்துட்டு மத்த சொத்து எல்லாத்தையும் மூத்த மகன்கள் ரெண்டுபேரும் எடுத்துகிட்டாங்க
சிலகாலங்களுக்கு அப்புறம் வீட்ட விட்டே அவன தொரத்திட்டாங்க

சோகமா இருந்த அந்த ஏமாளி மகன்கிட்ட பேச ஆரம்பிச்சது அந்த பூனை ,நான் ஒரு மந்திர பூனை எனக்கு ஒரு ஷூ வாங்கி கொடு உனக்கு நல்ல வாழ்க்கைய நான் அமைச்சு தரேன்னு சொல்லுச்சு அந்த பூனை

உடனே கடைக்கு பொய் நல்ல சூ வாங்கி கொடுத்தான் அந்த பையன்

அந்த மந்திர பூனை அந்த சூவ போட்டுக்கிட்டு காட்டுக்குள்ள போச்சு ,அங்க இருக்குற முயல் வலய தேடி பிடிச்சு அதுக்குள்ள இருந்த முயல பிடிச்சுட்டு வந்துச்சு ,

பசியோட இருந்த அந்த மூணாவது பையனுக்கு முயல் கறிய சமைச்சு கொடுத்துச்சு ,பசி தீர்ந்த அந்த பையன் ரொம்ப சொந்தோஷப்பட்டான்
அந்த நாட்டோட அரசனுக்கு முயல் கறினா ரொம்ப பிடிக்கும்னு தெரிஞ்சுக்கிட்டு ,நிறைய முயல்கள பிடிச்சிட்டு போயி அரசருக்கு கொடுத்துச்சு
அந்த அரசருக்கு அந்த பூனைய ரொம்ப பிடிச்சு போச்சு ,அந்த பூன என்ன சொன்னாலும் கேக்க ஆரம்பிச்சாரு

ஒருநாள் அரசர் போற வழியில அந்த பையன கூட்டிட்டு போயி நான் சொல்றத செய்னு சொல்லுச்சு
உன்னோட சட்டை எல்லாத்தையும் கழட்டிட்டு இந்த குளத்துக்குள்ள இறங்கிக்கன்னு சொல்லுச்சு

உடனே அவனும் தன்னோட சட்ட எல்லாத்தையும் கழட்டிட்டு குலத்துக்குள்ள இறங்குனான் ,சில நேரத்துக்கு அப்புறமா அந்த பக்கமா அரசர் வந்தார்

மந்திர பூனையே இங்க என்ன பண்றன்னு கேட்டாரு ,இங்க என்னோட நண்பன் ஒருத்தன் குளிச்சுகிட்டு இருந்தான் அவனோட ஆடைகள ஒரு நரி தூக்கிட்டு போய்டுச்சுன்னு சொல்லுச்சு அந்த பூன
உடனே தன்னோட ஆடை ஒன்ன எடுத்து அவனுக்கு கொடுத்தாரு அந்த ராஜா ,ராஜாவோட சட்டைய போட்டுக்கிட்டு வெளியில வந்தான் அந்த பையன்

ராஜ உடைல கம்பீரமா இருந்த அவன பாத்ததும் அவருக்கு ரொம்ப பிடிச்சு போச்சுச்சு அவன தன்னோடவே கூட்டிட்டு பொய் அரண்மனைல தங்க வச்சாரு

அவரோட மகளையும் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு,அந்த மந்திர பூனைக்கு நன்றி சொல்லிட்டு நல்லா வாழ ஆரம்பிச்சான் அந்த பையன்
Some words are wrongly typed