Auto Driver Kids Story In Tamil – ஆட்டோ ஓட்டுநர் குழந்தை கதை:- ஒரு பையன் ஊருக்கு போகுறதுக்கு பஸ் ஸ்டாண்ட் போக வாடகை ஆட்டோ பிடிச்சான்

அந்த ஆட்டோ ஓட்டுநர் ரொம்ப அமைதியானவரா இருந்தாரு
ரோட்ல எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிச்சு பாதுகாப்பா ஓட்டுனாரு அந்த ஓட்டுநர்
ஒரு இடத்துல வேண்டிய நிப்பாட்ட போனாரு அப்ப இன்னொரு வண்டி வேகமா வந்து அந்த இடத்துல நின்னுச்சு
தவறான முறைல வந்து நின்ன அந்த ஆட்டோ ஓட்டுநர் தன்னோட தப்ப காமிச்சுக்காம இவரை திட்ட ஆரம்பிச்சான்
இது எதையும் கண்டுக்காம தன்னோட வேலைய மட்டும் பாத்தாரு இவரு
இந்த நிகழ்ச்சியை பாத்த அந்த பையன் என்ன சார் நீங்க கோபமே படலன்னு கேட்டாரு
அது ஒன்னும் இல்ல தம்பி இங்க நிறைய பேரோட மனசு குப்பையா இருக்கு , அந்த குப்பையை யாரு மேலயாவது கொட்டி கிட்டே இருப்பாங்க நம்ம அந்த வசவுகளை செவி சாச்சம்னா அந்த குப்பைய நம்ம மேல கொட்டிடுவாங்க
அதனால நாம இதெல்லாம் கண்டுக்காம போயிடணும்னு சொன்னாரு