காட்டு ராஜாவுக்கு போட்டி – Animal Story For Kids:-ஒருநாள் காட்டு ராஜாவான சிங்கம் பக்கத்து நாட்டுக்கு பயணம் விரும்புச்சு ,அதனால தற்காலிகமா ஒரு அரசர நியமிக்க நினைச்சது சிங்கம்.
அதனால தற்காலிகமா ஒரு சிங்கராஜாவ கண்டுபிடிக்க போட்டி ஒன்னு வச்சது.
சிங்க ராஜாவுக்கு அவருக்கு பிடிச்ச குரங்கார் தான் இந்த போட்டியில ஜெயிக்கணும்னு ஆசை இருந்துச்சு
அதனால குரங்கருக்கு சுலபமான போட்டிய வைக்க நினைச்சது சிங்க ராஜா
அதனால வாழைப்பழம் தின்கிற போட்டிய அறிவிச்சது சிங்கம் ,இதுல கண்டிப்பா குரங்கு ஜெயிச்சிடும்னு நெனச்சது சிங்கம்
ஆனா போட்டி அன்னைக்கு குரங்கார விட மாத்த மிருகங்கள் தான் வாழைப்பழத்தை அதிகமா தின்னுச்சுங்க
ஆச்சார்ய பட்டு போன சிங்கராஜா கேட்டாரு ,இது என்ன குரங்காரே எப்பவும் வாழைப்பழம் அதிகமா சாப்பிடுற நீங்க எப்படி தோத்தீங்கன்னு கேட்டுச்சு
அதுக்கு குரங்கார் சொன்னாரு அரசே போட்டியில எப்பவும் தின்கிற வாழைப்பழத்தையே வச்சதுனால என்னால நிறய திங்க முடியல
ஆனா அதிகம் வாழைப்பழம் சாப்பிடாத மிருகங்கள் போட்டின்னு வந்ததும் விரும்பி அதிகமா தின்னுடுச்சுங்க
எனக்கு வாழைப்பழத்தை பசிக்கு தின்னுதான் பழக்கம் அதனால நான் தோத்துட்டேன்னு சொல்லுச்சு