அலாவுதீனும் அற்புத விளக்கும் – Alavudeen and Magic Lamb Kids Story in Tamil:- அரேபிய தேசத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு அங்க அலாவுதீன்னு ஒரு சின்ன பையன் தன்னோட அம்மாவோட வாழ்ந்துகிட்டு வந்தான்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-1-1024x409.jpg)
அவனும் அவுங்க அம்மாவும் ஏழ்மையால ரொம்ப கஷ்டப்பட்டாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-22-1024x393.jpg)
தங்களோட வீட்டு தோட்டத்துல விலையிற பொருட்கள வித்து வாழ்ந்து வந்தாங்க அவுங்க
ஒருநாள் தொலைதூரத்துல இருந்து அலாவுதீனோட மாமா அவுங்கள தேடிகிட்டு வந்தாரு
எனக்கு உதவியா அலாவுதீன அனுப்ப சொல்லி கேட்டாரு ,அதுக்கு அவுங்க அம்மாவும் ஒத்துக்கிட்டாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-21-1024x373.jpg)
அலாவுதீன கூட்டிகிட்டு அவுங்க மாமா காடு மலைன்னு நடந்து போய்க்கிட்டே இருந்தாரு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-20-1024x418.jpg)
ஒரு குகைக்கு பக்கத்துல போய் நின்னாரு அவரு ,
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-19-1024x394.jpg)
அலாவுதீன் இந்த குகைக்குள்ளே நிறைய புதையல் இருக்கு என்னால இதுக்குள்ள போக முடியலை அதனால நீ போய் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வானு சொன்னாரு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-18-1024x425.jpg)
இத கேட்ட அலாவுதீனுக்கு ரொம்ப பயமா போச்சு ,உடனே அந்த மாமா சொன்னாரு பயப்படாத என்கிட்ட மந்திர மோதிரம் இருக்கு அத உனக்கு தாரேன் எதாவது ஆபத்துன்னா அது உனக்கு உதவும்னு சொன்னாரு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-17-1024x412.jpg)
உடனே அலாவுதீனும் அந்த மோதிரத்தை போட்டுக்கிட்டு அந்த குகைக்குள்ள போனான்
அங்க நிறய புதையல் இருந்துச்சு ,அந்த புதையல எடுத்து அவுங்க மாமா கிட்ட கொடுத்தான் அலாவுதீன்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-15-1024x424.jpg)
கடைசியா தன்னை வெளியில தூக்க சொன்னான் அலாவுதீன் ,ஆனா அந்த மாமா சொன்னாரு ,இது மிக பெரிய புதையல் உன்ன வெளிய விட்டா நீ எல்லாரு கிட்டயும் சொல்லுவ ,இது அரசர் காதுக்கு போச்சுன்னா ,எல்லா புதையலையும் அவரு அரசாங்க கஜானாவுல சேத்துடுவாரு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-14-1024x418.jpg)
அதனால நீ உள்ளேயே கிடனு சொல்லிட்டு அந்த குகைய மூடிட்டாரு ,உடனே அலாவுதீன் ரொம்ப பயந்து போனான்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-13-1024x433.jpg)
மெதுவா கீழ வந்து பார்த்தான் அங்க ஒரு அழகான விளக்கு ஒன்னு இருந்துச்சு ,உடனே அத எடுத்து தொட்டு பார்த்தான் அலாவுதீன்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-16-1024x413.jpg)
உடனே ஒரு பெரிய பூதம் அவன் கண்ணு முன்னாடி வந்து நின்னுச்சு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-12-1024x406.jpg)
“நண்பரே நான் உங்கள் அடிமை ,உங்களுக்கு நான் என்ன செய்யணும்னு கேட்டுச்சு ,உடனே அலாவுதீன் தன்னோட வீட்டுக்கு போகணும்னு சொன்னான்
உடனே அந்த பூதம் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு ,அடுத்த நிமிஷம் அவன் தன்னோட வீட்டுல இருந்தான் ,இத பார்த்த அவுங்க அம்மா என்ன ஆச்சுன்னு கேட்டாங்க ,அதுக்கு நடந்த எல்லாத்தையும் சொன்னான் அலாவுதீன்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-11-1024x393.jpg)
அவுங்க அம்மா ஆச்சர்ய பட்டாங்க இருந்தாலும் அத நம்ப மறுத்தாங்க
உடனே அலாவுதீன் அந்த மந்திர விளக்க தேச்சி பூதத்தை வெளியில கொண்டு வந்தான் ,இத பார்த்த அவுங்க அம்மா ரொம்ப பயந்து போனாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-10-1024x395.jpg)
உடனே அந்த பூதம் சொல்லுச்சு ,பயப்பட வேண்டாம் நான் ரொம்ப நல்ல பூதம் உங்களுக்கு என்ன வேணும்னாலும் கேளுங்க நான் கொண்டு வந்து தாரேன்னு சொல்லுச்சு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-9-1024x435.jpg)
உடனே அவுங்க அம்மா எனக்கு நிறைய சாப்பாடு வேணும்னு சொன்னாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-8-1024x366.jpg)
உடனே அந்த பூதம் ஒரு மந்திரத்தை சொல்லுச்சு ,உடனே மூணு வெள்ளி தட்டுல நிறய சாப்பாடு வந்துச்சு
அலாவுதீனும் அவுங்க அம்மாவும் அந்த சாப்பிட்ட சாப்பிட்டாங்க ,உடனே அலாவுதீனுக்கு ஒரு யோசனை வந்துச்சு ,அந்த வெள்ளி தட்டு மூணையும் சந்தையில கொண்டு போய் வித்து தங்களோட வறுமைய போக்கிக்கிட்டான்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-4-1024x416.jpg)
ஒருநாள் அரசரை பாக்க போன அலாவுதீன் தன்னோட மாமா காமிச்ச புதையல் இருக்குற இடத்தை அரசருக்கு சொன்னான்
உடனே அரசர் அந்த புதையலை கண்டுபிடிச்சு அரசு கஜானாவுல சேர்த்துட்டாரு
அதுக்கு உதவின அலாவுதீனுக்கு தன்னோட மகளையும் கல்யாணம் பண்ணி வச்சாரு அரசர் ,அதுக்கு அப்புறமா ஒரு தனி அரண்மனையில் அலாவுதீனும் இளவரசியும் நிம்மதியா வாழ ஆரம்பிச்சாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-7-1024x401.jpg)
ஆனா புதையல் அரசருக்கு போய்டுச்சுன்னு தெரிஞ்ச அந்த மாமா அலாவுதீன் இல்லாத நேரமா பார்த்து வீட்டுக்கு வந்து இளவரசிய கடத்திட்டு போய்ட்டாரு ,
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-5-1024x428.jpg)
அப்படி போகும்போது அங்க இருந்த விளக்க பார்த்தாரு அது எதோ அறிய பொருளை இருக்கும்னு அதையும் எடுத்துட்டு போய்ட்டாரு அவரு
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-6-1024x407.jpg)
வீட்டுக்கு வந்து பார்த்த அலாவுதீன் ரொம்ப வறுத்த பட்டான் ,ஆனா பூதத்தோட ரகசியத்த ஏற்கனவே இளவரசிக்கு சொல்லி இருந்தான் அலாவுதீன் ,அதனால அந்த பொல்லாத மாமா இல்லாத நேரம் அந்த மந்திர விளக்க தெச்சங்க இளவரசி ,உடனே அங்க வந்துச்சு பூதம்
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-2-1024x413.jpg)
இளவரசி சொன்னாங்க ,நான் உடனே அலாவுதீன் கிட்ட போகணும் ,அதே நேரத்துல இந்த நயவஞ்சக மாமா பாதாள சிறைக்கும் போகணும்னு சொன்னாங்க
![அலாவுதீனும் அற்புத விளக்கும் - Alavudeen and Magic Lamb Kids Story in Tamil](https://tamilkidsstory.com/wp-content/uploads/2023/06/அலாவுதீனும்-அற்புத-விளக்கும்-Alavudeen-and-Magic-Lamb-Kids-Story-in-Tamil-3-1024x393.jpg)
பூதமும் அதே மாதிரி செஞ்சது ,அதுக்கு அப்புறமா அலாவுதீன் நல்ல படியா நேர்மையா வாழ்ந்து ஊர் மக்களுக்கு நல்லது செஞ்சான்