காயத்ரி மந்திரம்- அக்பர் பீர்பால் கதைகள் :- அக்பரும் பீர்பாலும் ஒருநாள் மக்களின் குறைகளை கண்டறிய நகர்வலம் வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஒரு பிச்சைக்காரன் அக்பரிடம் பிச்சை கேட்டான். இவர்கள் போன்ற சோம்பேறிகளை இந்த நாட்டில் வைத்திருக்கக்கூடாது இவர்களுக்கு வேறு வேலையே செய்யத் தெரியாதா என்று கோபமாகக் கூறினார்.
இதை கேட்ட பீர்பாலுக்கு கோபம் வந்தது பிச்சைக்காரனாக இருந்தாலும் அவர் ஒரு மனிதர் அவரை இவ்வாறு அரசர் கூறி இருக்கக் கூடாது என்று தனக்குள் நினைத்துக் கொண்ட பீர்பால்,
மெல்ல அந்த பிச்சைக்காரனிடம் நீ தினந்தோறும் காலையில் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும் அவ்வாறு சொல்லினால் தினமும் உனக்கு ஒரு வெள்ளிக்காசு அரண்மனையிலிருந்து கொடுக்கப்படும் என்று கூறினார்
தினந்தோறும் காலை காயத்திரி சொல்லி முடித்தபின்பு அரண்மனைக்குச் சென்று வெள்ளிக் காசை பெற்றுக் கொண்டான் அந்த பிச்சைக்காரன். நாட்கள் செல்ல செல்ல காயத்ரி மந்திரம் சொல்வதில் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்ட அந்த பிச்சைக்காரன் ஆன்மீகத்தில் ஈடுபட தொடங்கினான்.
சில நாட்களுக்கு பிறகு அவனை சந்தித்த பீர்பால் நீ ஒரு நாள் முழுவதும் காயத்ரி மந்திரத்தை திரும்ப திரும்ப சொல்லி வந்தால் உனக்கு தினம்தோறும் ஒரு தங்கக் காசு கிடைக்கும் அதையும் நீ அரண்மனையில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று கூறிச் சென்றார்.
ஏற்கனவே ஆன்மீகப் பாதையில் தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த பிச்சைக்காரன் தொடர்ந்து காயத்திரி மந்திரம் சொல்ல தொடங்கியதிலிருந்து அவனது வாழ்க்கை மாறத்தொடங்கியது புதிய புதிய ஆன்மீக புத்தகங்களை பயில்வதில் மந்திரங்கள் படிப்பதிலும், இதிகாசங்களையும் செய்வதிலும் அவன் வாழ்க்கையை செலவிட்டான்.
இதன் காரணமாக அவனுக்கு வாழ்வில் செல்வம் செழிக்க தொடங்கியது. சில காலம் கழித்து அரண்மனைக்குச் சென்று தங்க காசு பெறுவதையும் நிறுத்திவிட்டான். பிச்சைக்காரன் வந்து தங்க காசு பெறுவதை நிறுத்தி விட்டதை அறிந்து கொண்ட பீர்பால் அந்த பிச்சைக்காரனை அரசருடன் சென்று சந்தித்தார் .
ஏன் தங்க காசு பெற வரவில்லை காயத்ரி மந்திரம் சொல்வதை நிறுத்தி விட்டாயா என்று கேட்டார் அக்பர்.
இல்லை அரசர் அவர்களே தொடர்ந்து காயத்ரி மந்திரம் உச்சரிக்க தொடங்கிய நாள் முதல் எனது வாழ்வில் சோம்பேறித்தனம் என்பது ஒளிந்தது வாழ்வின் உன்னதங்கள் புரிய தொடங்கின தொடர்ந்து ஆன்மிகப் பாதையில் செல்லத் தொடங்கிய நான் இன்று நல்ல நிலையில் உள்ளேன்
ஆகவே பிச்சைக்காரன் என்ற நிலையிலிருந்து எப்போதோ விடுபட்டு விட்டேன் இனி உங்களிடம் வேலை பார்க்காமல் தங்ககாசு பெறுவது தவறாகும் எனக்கு எனது வாழ்க்கையை திருப்பி தந்த உங்களுக்கும் உங்களுக்கும் பீர்பால் அவர்களுக்கும் நன்றி என்று கூறினான்
Super story