சிவந்த நிறம் அக்பர் பீர்பால் கதை – Akbar Birbal Funny Story :-ஒரு நாள் அக்பர் அரசவையில் இருந்தாரு , அப்ப பீர்பாலோட புகழால பொறாமையில இருந்த ஒரு அமைச்சர்

அரசே நீங்க தங்கம் மாதிரி சிவந்த நிறத்துல ஜொலிக்குறிங்க ,அதுமாதிரி இந்த அரசவையில இருக்குற எல்லாரும் சிவந்த நிறத்துல அழகா இருக்காங்க ஆனா இந்த பீர்பால் மட்டும் ஏன் கருப்பா இருக்காருனு கேட்டு சிரிச்சாரு
உடனே அக்பர் பீர்பால மட்டம் தட்டவே இந்த பேச்சை அமைச்சர் எடுத்திருக்குராருக்கிறத புரிஞ்சிக்கிட்டாரு

அப்ப அக்பர் பீர்பாலே இதுக்கு நல்ல பதிலடி கொடுப்பாருனு பீர்பால பாத்தாரு
உடனே அவருக்கு பதிலடி கொடுக்க பீர்பால் சொன்னாரு

அரசே இந்த அரசவையில இருக்குற எல்லாரும் சிவந்த நிறத்தோட அழகா இருக்கணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டாங்க போல அதான் கடவுள்கிட்ட நிறைய அறிவு மிச்சமாகிடுச்சு
மிச்சமிருந்த அறிவு எல்லாத்தையும் எனக்கு கொடுத்து அனுப்பிச்சிருக்காருனு சொன்னாரு பீர்பால்
இதைக்கேட்ட அந்த அமைச்சர் தன்னை அறிவில்லாதவன்கிற பொருள் படுறமாதிரி பேசி தன்ன மீண்டும் ஜெயிச்சிட்டாரு பீர்பலுங்கிறத புரிச்சிகிட்டு அமைதியா இருந்தாரு அவரு