A rich man and his son Short story – செல்வந்தரும் பட்டம் வாங்கும் மகனும் :- ஒரு ஊருல ஒரு செல்வந்தர் வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவருக்கு ஒரே ஒரு மகன்
அந்த மகன் நல்ல படிச்சு பட்டம் வாங்குனாரு, பட்டம் வாங்குற அன்னைக்கு எனக்கு ஒரு புது கார் வேணும்னு தன்னோட அப்பாகிட்ட கேட்டாரு
செல்வந்தரான அந்த அப்பாவுக்கு புது கார் வாங்குறது சுலபம்னு நினைச்சாரு
பட்டம் வாங்குன அந்த மகனுக்கு ஒரு பெரிய பரிசு பொட்டணத்த கொடுத்தாரு
அத ஆவலா பிரிச்ச மகனுக்கு அதிர்ச்சியை இருந்துச்சு அதுல ஒரு புது டைரி மட்டும் இருந்துச்சு
அத பாத்த மகனுக்கு கோபம் வந்துச்சு தன்னோட ஆசைய நிறைவேத்தாத அப்பாவோட கோவிச்சுக்கிட்டு அந்த டைரியை தூக்கி போட்டுட்டு போயிட்டாரு
தன்னோட அப்பாவோட கோபப்பட்டாலும் தன்னோட அப்பா மாதிரியா நிறைய உழைச்சு பணக்காரர் ஆனார் அந்த பையன்
ரொம்ப வருஷங்கள் கழிஞ்சதுக்கு அப்புறமா அந்த பணக்கார செல்வந்தர் இறந்து போனாரு
தன்னோட அம்மாவை பாக்க வீட்டுக்கு போன அந்த மகன் தன்னோட அப்பாவோட டேப்ளேமேல தான் தூக்கி எரிஞ்சு டைரி இருந்துச்சு
அந்த டைரிய எடுத்து பெரிச்சாரு அதுக்குள்ள ஒரு கார் சாவி இருந்துச்சு அதுக்கு அடுத்தபடியா “நீ கேட்ட காரும் என்னோட பரிசா இந்த டைரியும்’ னு எழுதி இருந்துச்சு
அடடா அவசரப்பட்டு அப்பாவ இத்தன நாள் புரிஞ்சிக்காம விட்டுட்டோமேன்னு எண்ணி கவலைப்பட்டாரு