A boy who Loves disabled dog – கால் இல்லாத நாய்க்குட்டி :- ஒரு விவசாயி நாய் குட்டி விக்கிற தொழிலும் செஞ்சாரு

ஒருதடவ விளம்பர பலகைகளை தொங்க விட்டுக்கிட்டே போனாரு
அந்த தெருவோட கடைசில ஒரு சின்ன பையன் எட்டி பாத்து
ஐயா எனக்கு ஒரு நாய் குட்டி தரீங்களானு கேட்டான்
இது விற்பனைக்குன்னு சொன்னாரு அவரு ,உடனே அந்த பையன் கைல இருந்த கொஞ்சம் பணத்த அவருகிட்ட கொடுத்தான்
உடனே அந்த விவசாயி விசில் அடிச்சாரு உடனே ஒரு தாய் நாயும் சில நாய்குட்டியும் ஓடி வந்துச்சுங்க
அதுல கடைசியா ஒரு சின்ன நாய்க்குட்டி மட்டும் நடக்க முடியாம மெதுவா வந்துச்சு
எனக்கு அந்த கடைசியா வர்ற நாய் வேணும்னு சொன்னான் ,அதுக்கு அவர் தம்பி அந்த நாய் ஒரு நோஞ்சான் அது உன்கூட விளையாட முடியாது அது உனக்கு வேணாம் வேற குட்டி எடுத்துக்கோ அப்படின்னு சொன்னாரு
இல்ல எனக்கு அந்த நாய் தான் வேணும்னு சொல்லி அத எடுத்துக்கிட்டான் ,அப்பத்தான் அந்த விவசாயி கவனிச்சாறு அந்த பையனுக்கும் கால் கொஞ்சம் வளர்ச்சி இல்லாம இருந்தத
எல்லோருக்கும் பலவீனம் இருக்கத்தான் செய்யும் அத நாம ஒத்துக்கிடனும் அத ஒரு இழப்பா நினச்சு கிட்டே இருந்தா ஒன்னும் செய்ய முடியாது