Selling Combs – Tamil Motivational Story for Kids :- சீனாவுல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு வித விதமா சீப்பு செஞ்சு விக்கிற தொழில் செய்துகிட்டு வந்தாரு
அவருக்கு மூணு மகன்கள் அவுங்களும் அந்த வியாபாரத்தை அப்பா கூட சேந்து கவனிச்சிக்கிட்டு வந்தாங்க
கொஞ்ச காலத்துக்கு அப்புறமா அந்த வியாபாரிக்கு வயசாகிடுச்சு
இந்த தொழிலை தன்ன விட யார் நல்லா செய்றங்களோ அவுங்ககிட்ட ஒப்படைக்கணும்னு நினைச்சாரு
அதுக்காக அந்த மூணு மகன்களையும் கூப்பிட்டு ஒரு தேர்வு வச்சாரு
நீங்க மூணு பேரும் மூணு மடத்துக்கு போங்க அங்க இருக்குற புத்த சன்யாசிக்கிங்க கிட்ட சீப்பு வித்துட்டு வாங்க யார் அதிகமான சீப்பு விக்கிறீங்களோ அவுங்களுக்கு தான் இந்த வியாபார கடை முழுசையும் ஒப்படைப்பேன்னு சொன்னாரு
குழம்பிபோனாங்க அந்த மகன்கள் ,புத்த பிட்சுக்கள் எப்பவும் மொட்டை தலையோட இருப்பாங்க அவுங்க கிட்ட எப்படி சீப்பு விக்கிறதுன்னு குளம்புனலும் ஒவ்வொருத்தரும் அவுங்களுக்கு சொன்ன மடத்துக்கு போனாங்க
முதல் பையன் திரும்பி வந்து என்னால ரெண்டு சீப்புதான் விக்க முடிஞ்சதுன்னு சொன்னான்
அதுக்கு அந்த வியாபாரி கேட்டாரு என்ன சொல்லி வித்த னு கேட்டாரு
அதுக்கு அவன் சொன்னான் முதுகு சொறியிரத்துக்கு தேவைப்படும்னு சொல்லி வித்தேன்னு சொன்னான் அவன்
அடுத்ததா ரெண்டாவது மகன் என்னால 10 சீப்பு விக்க முடிஞ்சதுன்னு சொன்னான்
அதுக்கு அந்த வியாபாரி கேட்டாரு என்ன சொல்லி வித்த னு கேட்டாரு
அதாவது அந்த மடத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வர்றத பாத்தேன் அவுங்களுக்கு உபயோகமா இருக்கும் நீங்க சீப்பு வாங்கி வாசல் பக்கத்துல வைங்கன்னு சொல்லி வித்தேன்னு சொன்னான் அந்த ரெண்டாவது மகன்
அடுத்ததா கடைசி மகன் வந்து சொன்னான் நான் கொண்டு போன ஆயிரம் சீப்பையும் வித்துட்டேன்னு சொன்னான்
அதுக்கு அந்த வியாபாரி கேட்டாரு என்ன சொல்லி வித்த னு கேட்டாரு
அதுவா அதாவது அந்த மடத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வர்றத நானும் தெரிஞ்சுகிட்டேன்
அதனால அந்த மட தலைவர் கிட்ட போயி இங்க வர்ற எல்லாருக்கும் புத்தர் சொன்ன வாசகங்கள பொறிச்ச சீப்ப கொடுத்தீங்கன்னா
தினமும் தலைவார எல்லோரும் அத பயன்படுத்துவாங்க அப்ப அந்த வாசகங்கள எல்லோரும் படிச்சு நல்ல படியா நடந்துக்குவாங்கன்னு சொன்னேன்
அவுங்க கேட்ட மாதிரியே நல்ல வாசகங்களை அந்த சீப்புல பொரிச்சு கொடுச்சு அதுக்கும் ஒரு தொகைய வாங்கிட்டேன்னு சொன்னாரு
அப்பத்தான் அந்த வியாபார நிலயத்தோட தலைவரை அந்த கடைசி பையன் இருக்கட்டும்னு எல்லோரும் ஒத்துக்கிட்டாங்க
fine. superb . Needs lot of thinking.