Never lose hope – Email Wallmart Story for Kids

Never lose hope – Email Wallmart Story for Kids:- ஒரு மளிகை கடை நேர்முக தேர்வுக்கு ஒருத்தர் போயிருந்தாரு

Never lose hope - Email Wallmark Story for Kids

அங்க கேட்க பட்ட எல்லா கேள்விக்கும் தெளிவா பதில் சொன்னாரு அவரு

நீங்க உங்க ஈமெயில் கொடுங்க நாங்க உங்களுக்கு இந்த நேர்முக தேர்வோட முடிவ அனுப்புறோம்னு சொன்னாங்க

அதுக்கு அவர் என்கிட்டே கம்ப்யூட்டரும் இல்ல ஈமெயில் முகவரியும் இல்லைனு சொன்னாரு

அதுக்கு இந்த வளரும் உலகத்துல ஈமெயில் கூட இல்லையான்னு சொல்லி அவர நிராகரிச்சாங்க

சோர்ந்துபோகாத அவர் தன்கிட்ட இருந்த 200 ரூபாய வச்சு கொஞ்சம் காய்கறி வாங்குனாரு

அத வீடு வீடா கொண்டுபோயி வித்தாரு , அந்த பணத்த வச்சு திரும்பவும் காய்கறி வாங்கி வியாபாரம் பண்ணுனாரு

விடா முயற்சியோட அவர் செஞ்ச இந்த காரியத்தால நாட்லயா மிகப்பெரிய விற்பனை நிலையாம் அவரோடதா ஆனது

ஒரு நாள் ஒரு பத்திரிக்கை அவரை பேட்டி எடுத்தாங்க,இந்த பேட்டியை பிரசுரிக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு ஈமெயில் மூலமா அனுப்புறோம்னு சொன்னாங்க

என் கிட்ட ஈமெயில் இல்லைனு சொன்ன இவரு கிட்ட ,எதுவுமே இல்லாம இவ்வளவு முன்னேறி இருக்குற நீங்க ஈமெயில் வச்சிருந்தா

எவ்வளவு முன்னேறி யிருப்பேங்கன்னு கேட்டாரு

அதுக்கு அவரு சொன்னாரு ஒரு மளிகை கடைல வேலை பாத்துகிட்டு இருந்திருப்பேனு சொன்னாரு