விக்ரமாதித்தன் வேதாளம் கதை -4 யாருடன் திருமணம் – Vikram and Betal Story in Tamil :- மீண்டும் மீண்டும் தன்னை சிக்கலில் சிக்கவைத்து தன்னிடம் இருந்து தப்பித்த வேதாளத்தை மீண்டும் பிடித்து தனது குருவிடம் ஒப்படைக்க தனது தோளில் தூக்கிக்கொண்டு நடந்தான் விக்ரமாதித்தன்

தனக்கு விடை தெரிந்தும் பேசாமல் இருந்தால் தனது தலை வெடித்துவிடும் ,பேசினால் வேதாளம் மீண்டும் தப்பித்து விடும் என்ற நிலையிலும் தனது முயற்சியை தொடர்ந்து செய்தான் விக்ரமாதித்தன்

அப்பத்தான் வேதாளம் உனக்கு இன்னொரு கதை சொல்லட்டுமான்னு கேட்டுச்சு ,வேதாளம் தன்னோட வேலைய காட்ட ஆரம்பிச்சுடுச்சுனு கடுப்பான விக்ரமாதித்தன் பேசாம நடக்க ஆரம்பிச்சான்
ஒரு ஊருல சந்திரலேகானு ஒரு இளவரசி இருந்தா ,ரொம்ப அழகான அவளுக்கு நிறைய அறிவும் இருந்துச்சு அதனால அவளோட புகழ் உலகத்துல இருந்த எல்லா நாடுகளுக்கும் பரவி இருந்துச்சு
அவளை கலையகம் செஞ்சுக்கிட எல்லா நாட்டு இளவரசர்களும் விருப்ப பட்டாங்க ,ஆனா இளவரசி சந்திரலேகா எனக்கு வரபோற கணவர் புத்திசாலியா இருக்கணும் ,திறமையான வனா இருக்கணும் அதே நேரத்துல யாரையும் வெல்லக்கூடிய பலசாலியாவும் இருக்கணும்னு சொன்னா

இத கேட்ட அவுங்கா அப்பாவான பேரரசர் எல்லா நாடுகளுக்கும் தன்னோட மகளுக்கு தகுந்த இளவரசரை தேடி ஆட்களை அனுப்புச்சாறு ,எவ்வளவு தேடியும் சந்திரலேகா கேட்ட மாதிரி இளவரசர் யாரும் கிடைக்கல

அப்பத்தான் அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு எல்லா இளவரசர்களும் இளவரசிய பாக்க வர சொல்லி ஓலை அனுப்புனாரு ,சந்திரலேகாவே தனக்கான கணவனை தேர்ந்தெடுக்க போட்டி நடத்திக்கிட சொன்னாரு
இளவரசியோட எதிர்பார்ப்புக்கு ஏத்தபடி இருக்குற வீர இளவரசர்கள் இளவரசியை பார்க்க நேருல வர ஆரம்பிச்சாங்க

இளவரசியை ஜெய்னு ஒரு இளவரசர் வந்தாரு அவருக்கு மக்களோட எதிர்காலத்தை கணிச்சு சொல்லுற திறமை இருக்கு , புத்திசாலியான என்ன நீங்க கல்யாணம் செஞ்சுக்கிடணும்னு சொன்னாரு
இத கேட்ட இளவரசி நீங்க கொஞ்ச நாள் எங்க நாட்டுல விருந்தாளியா தங்குங்கா உங்க திறமையை சோதிச்சு என்னோட முடிவை சொல்லுறேன்னு சொன்னா சந்திரலேகா

மறுநாள் உதைனு ஒரு இளவரசர் இளவரசியை பாக்க வந்தாரு ,நான் மிக திறமையானவன் என்னால குதிரை வண்டிய மின்னல் வேகத்துல ஓட்ட முடியும்னு சொன்னாரு

இத கேட்ட சந்திரலேகா அவரையும் தங்களோட நாட்டுல தங்கி இருக்க சொன்னா ,அவரோட திறமையை சோதிச்சிட்டு அவளோட முடிவ சொல்றதா சொன்னா ,இத கேட்ட உதையும் அங்கேயே தங்க ஆரம்பிச்சாரு

அடுத்தநாள் வீர்னு ஒரு இளவரசர் சந்திரலேகா கிட்ட வந்து உன்ன கல்யாணம் செஞ்சுக்கிட விரும்புறேன் ,நான் ஒரு மாவீரன் என்ன எதிர்த்த யாரும் இதுவரை ஜெயிச்சது இல்லைனு சொன்னாரு ,சந்திரலேகா அவரையும் அங்கேயே தங்க சொன்னா ,வீரும் அங்கேயே தங்க ஆரம்பிச்சாரு

மூணு இளவரசர்கள்ல யாரை கல்யாணம் பண்ண போறா தன்னோட பொண்ணுன்னு யோசிச்ச மகாராணி இளவரசிய பாக்க போனாங்க ,

ஆனா இளவரசியோட அரை காலியா இருந்துச்சு யாரோ இளவரசியை கடத்திட்டு போய்ட்டாங்கனு தெரிஞ்சிகிட்ட மகாராணி அழ ஆரம்பிச்சாங்க

அப்ப அங்க வந்த மூணு இளவரசர்களும் அறைய நல்லா சோதனை செஞ்சாங்க, அப்ப ஜெய் தன்னோட கண்ண மூடி என்ன நடந்துச்சுனு கணிக்க ஆரம்பிச்சாரு ,

அப்பத்தான் அவருக்கு தெரிஞ்சுது காட்டுல வாழுற கொள்ளிவாய் பேய் தான் இளவரசிய கடத்திட்டு போயிருக்கு அது இருக்குற இடம் கூட எனக்கு தெரியும்னு சொன்னாரு

உடனே உதை என்னால மின்னல் வேகத்துல குதிரை வண்டி ஓட்ட முடியும் வாங்கனு சொன்னாரு ,உடனே மூணு பேரும் வண்டியில ஏறிக்கிட்டாங்க உதை அந்த வண்டிய மின்னல் வேகத்துல ஓட்டுனாரு ,

அந்த கொள்ளிவாய் பேய் இருக்குற இடத்துக்கு அவுங்க அடுத்த நிமிஷமே போய்ட்டாங்க

அங்க பார்த்தா ஒரு மிக பெரிய கொள்ளிவாய் பேய் இளவரசியை தன்னோட கையில வச்சிக்கிட்டு இருந்துச்சு , உடனே கோபமான வீர் தன்னோட வாளை எடுத்து அதுகூட சண்டை போட ஆரம்பிச்சாரு

தன்னோட பலம் எல்லாத்தையும் திரட்ட சண்ட போட்ட வீர் அந்த கொள்ளிவாய் பேயா ஜெயிச்சிட்டாரு

–அப்ப கதையை நிப்பாட்டுனா வேதாளம் -தன்னோட உயிரை காப்பதுன மூணு இளவரசர்களையும் கல்யாணம் செஞ்சுக்க முடியாதேன்னு வருத்தப்பட்ட இளவரசி சந்திரலேகா என்ன செஞ்சிருப்பானு நீ நினைக்குறேனு கேட்டுச்சு

–அதே நேரத்துல வேதாளம் கேட்ட கேள்விக்கு புத்திசாலியான விக்கிரமாதித்தனுக்கு விடை தெரிஞ்சிடிச்சு ,அடடா இப்ப விடய சொல்லலைனா தன்னோட தலை வெடிச்சிடுமேனு நினைச்ச விக்ரமாதித்தன் தன்னோட பதிலை சொல்ல ஆரம்பிச்சாரு
வீர்தான் சந்திரலேகாவுக்கு பொருத்தமானவரு , அவ இருக்குற இடத்தை ஜெய் இல்லாம கூட கண்டுபிடிச்சிடலாம் ,உதை இல்லாம கூட அந்த இடத்துக்கு வேகமா போயிருக்கலாம் ,ஆனா வீர் மாதிரி ஒரு பலசாலி இல்லனா யாராலயும் சந்திரலேகாவ காப்பாத்தி இருக்க முடியாதுனு சொன்னாரு விக்ரமாதித்தன்

அவரோட விடய கேட்ட வேதாளம் சிரிச்சிகிட்டே புளிய மரத்தை நோக்கி பறந்து போச்சு ,அடடா இன்னொரு தடவ இந்த வேதாளத்துக்கிட்ட ஏமாந்துட்டமேன்னு நினச்சா விக்ரமாதித்தன் இந்த வேதாளத்தை பிடிக்காம விடக்கூடாதுனு வேகமா அத தொடர்ந்து போனாரு