Cocoon and the Butterfly – கூட்டு புழுவும் பட்டாம் பூச்சியும் : – ஒரு ஊருல தங்கம்னு ஒரு பையன் இருந்தான் , அவனுக்கு பட்டாம்பூச்சினா ரொம்ப பிடிக்கும்
பட்டாம் பூச்சிய பாத்து பரவசப்படுறது ,அத பத்தி படிக்கிறதுன்னு அவனுக்கு இதே வேலைதான்
ஒருநாள் மரத்தடியில ஒரு கூட்டு புழுவ பாத்தான், அது தன்னோட கூட்ட விட்டு வெளியேறி பட்டாம்பூச்சியா மாறப்போர நிலைல இருந்துச்சு
அகா இந்த அற்புத நிகழ்வ நாம இன்னைக்கு பாக்கலாம்னு பக்கத்துலயே ஒரு பார மேல உக்காந்து பாத்தான்
சின்ன ஓட்ட மட்டும் அந்த கூட்டு புழுவுக்கு இருந்துச்சு
அதனால அதுவலியா வர முடியல, ரொம்பவே கஷ்ட பட்டுச்சு அந்த கூட்டுப்புழு
மெதுவா மெதுவா ஓட்ட முட்டுன அந்த பட்டு புழுவாள வெளிய வர முடியல
கூட்டுப்புழு கஷ்டப்படுத்த வேணாம்னு அந்த ஓட்ட மெதுவா பிச்சி விட்டான் தங்கம்
ஆகா இப்ப ஓட்ட பெருசா மாறிடுச்சு இப்ப பட்டாம்பூச்சி வெளிய வர போகுதுன்னு ஆவலா பாத்தான்
ஆனா எந்த வித முயற்சியும் இல்லாம வெளிய வந்த பட்டாம் பூச்சியினால தன்னோட இயற்க்கை திரவத்தை சுரக்க முடியல
அதனால அதோட ரெக்கை பலமானதா இல்லாம துவண்டு போச்சு
அப்பத்தான் தங்கத்துக்கு புரிஞ்சது கஷ்டப்படாம கிடைக்கிறது நிலைக்காதுன்னு