ரீலிஸ் பார்த்த காகம் -Lost in Reels: A Crow’s Lesson on Priorities:-ஒரு சின்ன நகரத்துக்கு பக்கத்துல ஒரு பெரிய மரம் இருந்துச்சு ,அந்த மரத்துல ஒரு காக்கா வாழ்ந்துகிட்டு வந்துச்சு
![](https://tamilkidsstory.com/wp-content/uploads/2025/02/ரீலிஸ்-பார்த்த-காகம்-Lost-in-Reels-A-Crows-Lesson-on-Priorities-3-1024x585.jpg)
அது எப்பவும் பக்கத்துல இருக்குற பார்க்குல போயி தனக்கு தேவையான உணவ எடுத்து சாப்பிட்டுட்டு அடுத்து வர்ற காலங்கள்ல உணவு தேட முடியாத நிலை வந்துச்சுனா என்ன பண்ணுறதுனு ,நிறைய உணவுகளை எடுத்துட்டு வந்து தன்னோட பொந்துல சேமிச்சு வைக்கும்
அப்படி ஒருநாள் அந்த காக்கா உணவு தேடிகிட்டு இருந்தப்ப அது கண்ணுல ஒரு ஸ்மார்ட் போன் பட்டுச்சு ,அது யாருதுனு பாத்துச்சு காக்கா ஆனா அங்க யாருமே இல்ல ,இத யாரோ தவற விட்டுட்டாங்க இது இங்கயே கிடந்தா கேட்டு போயிடும் ,இத எடுத்துட்டு போயி பத்திரமா வைப்போம் ,நாளைக்கு இந்த பார்க்குக்கு வர்ற மனிதர்கள் கண்ணுல படுற மாதிரி வைப்போம் ,அப்படி செஞ்சா அந்த ஸ்மார்ட் போன் உரியவங்க கையில போயி கிடைக்கும்னு நினைச்சது
![](https://tamilkidsstory.com/wp-content/uploads/2025/02/ரீலிஸ்-பார்த்த-காகம்-Lost-in-Reels-A-Crows-Lesson-on-Priorities-1-1024x585.jpg)
உடனே பறந்து போயி அந்த ஸ்மார்ட் போன எடுத்த காக்கா தன்னோட பொந்துல கொண்டுபோயி வச்சுச்சு , அப்ப திடீர்னு அந்த ஸ்மார்ட் போன்ல இருந்த ஆப் தொறந்துச்சு ,அதுல பறவைகள் டான்ஸ் ஆடுற வீடியோ ஓடுச்சு ,அத பார்த்து ஆச்சர்ய பட்ட காக்கா தொடர்ந்து ரீலிஸ் வீடியோ பார்க்க ஆரம்பிச்சுச்சு
அந்த நேரத்தில சூடான ஸ்மார்ட்போன் குளிருக்கு இதமா இருந்துச்சு ,அன்னைல இருந்து உணவு தேட கூட வெளிய போகாம பொந்துலேயே இருந்து ரீல்ஸ் வீடியோ பார்த்து நேரத்தை வீணடிச்சுச்சு
![](https://tamilkidsstory.com/wp-content/uploads/2025/02/ரீலிஸ்-பார்த்த-காகம்-Lost-in-Reels-A-Crows-Lesson-on-Priorities-4-1024x585.jpg)
ரெண்டு மூணுநாள் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்த்துச்சு காக்கா ,அப்ப அந்த ஸ்மார்ட் போன் சார்ச் இல்லாம அமந்து போச்சு ,அப்பத்தான் காக்காவுக்கு புரிஞ்சது தான் ரெண்டு மூணு நாளா எதுவுமே சாப்பிடாம ,உணவு தேடாம, உணவு சேமிக்காம,தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பார்த்து நேரத்தை வீணடிச்சுச்சு இருக்கோம்னு
![](https://tamilkidsstory.com/wp-content/uploads/2025/02/ரீலிஸ்-பார்த்த-காகம்-Lost-in-Reels-A-Crows-Lesson-on-Priorities-2-1024x585.jpg)
ரொம்ப பசி எடுத்த காக்கா உணவு தேடலாம்னு கிளம்புச்சு ,தொடர்ந்து பொந்துலேயே சாப்பிடாம கிடந்த காக்கா பறக்க கூட தெம்பு இல்லாம போச்சு ,அப்பத்தான் ஸ்மார்ட் போன் ஒழுங்கான ஒழுக்கத்தோட பயன்படுத்தனும் ,தன்னை போல நேரம் காலம் இல்லாம பயன்படுத்தினா துன்பம்தான் வரும்னு புரிச்சிக்கிடுச்சு
![](https://tamilkidsstory.com/wp-content/uploads/2025/02/ரீலிஸ்-பார்த்த-காகம்-Lost-in-Reels-A-Crows-Lesson-on-Priorities-5-1024x585.jpg)
அன்னைல இருந்து அந்த பார்க்குக்கு வர்ற குழந்தைகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்துறத பார்த்தா உடனே போயி அத தட்டி விட ஆரம்பிச்சுச்சு காக்கா , அதனால அங்க வர்ற குழந்தைகள் பார்க்குக்கு வந்தும் ரீல்ஸ் பாக்காம ஓடி ஆடி விளையாண்டு தங்களோட உடம்ப மட்டுமில்லாம மனசையும் நல்லபடியா பார்த்துக்கிட்டாங்க