மரியாதை ராமனும் மூன்று கேள்விகளும் -Mariyadhai Raman, the Donkey, and the Defeat of the Scholars:-மரியாதை ராமனின் அறிவை பற்றியும் அவரது உன்னதமான சாதுர்யமான பேச்சை பற்றியும் உலகம் முழுவதும் பேச்சாய் இருந்துச்சு
அத கேள்விப்பட்ட பக்கத்து நாட்டு அரசன் மரியாதை ராமன நம்ம நாட்டுக்கு வர வச்சு அவரு பெரிய ஞானி எல்லாம் இல்ல முட்டாள்னு உலகத்துக்கு நிரூபிக்கணும்னு நினைச்சான்
அதனால மரியாதை ராமன தன்னோட அரண்மனைக்கு வர சொல்லி கடிதம் ஒன்னு அனுப்புனான் , அந்த கடிதத்துல நீங்க பெரிய அறிவாளின்னு உங்க நாட்டுல வேணா சொல்லிக்கிடலாம் ,நீங்க இங்க வந்தா கழுதையோட அறிவு மட்டும்தான் உங்களுக்கு இருக்குனு எங்க அரசவை ஞானிகள் நிரூபிப்பாங்க ,போட்டிக்கு வாரீங்களானு எழுதி இருந்துச்சு
அரசரோட கடிதம் கிடைச்சதும் மரியாதை ராமனுக்கு சந்தேகம் வந்துடுச்சு , எப்படி இருந்ததாலும் இந்த அரசன் நம்ம சும்மா விருந்துக்கு கூப்பிட வாய்ப்பு இல்ல ,நம்மள மட்டம் தட்டவே கூப்பிட்டு இருக்காருன்னு புரிஞ்சிக்கிட்டாரு இருந்தாலும் அங்க போயி என்ன நடக்குதுன்னு பாக்க நினைச்சாரு
உடனே தன்னோட கழுதைய கூட கூட்டிகிட்டு பக்கத்து அரசரோட அரண்மனைக்கு போனாரு மரியாதை ராமன் , விருந்துக்கு வந்த மரியாதை ராமன் எதுக்கு கழுதைய கூட்டிட்டு வந்திருக்காருனு அரசருக்கு ஒரே குழப்பம் ,இருந்தாலும் அவர வரவேற்று அரசவையில உக்கார வச்சாரு ,என்னோட கழுதைய பக்கத்துல வச்சிக்கிட எனக்கு அனுமதி வேணும் அப்பத்தான் நான் உக்காருவேன்னு சொன்னாரு
ஏன் இப்படி கழுதைக்கும் இங்க இடம் கேக்குறீங்கன்னு அங்க இருந்த வங்க கேட்டாங்க அதுக்கு என்னோட அறிவு இந்த கழுத கிட்ட தான் இருக்குனு சொன்னாரு ,குழப்பமான அரசனும் கழுதைய பக்கத்துலயே வச்சிக்கிட்டாரு
அப்ப ஒரு அறிஞர் எழுந்திரிச்சி இந்த உலகத்துலயே உயர்வானது எதுன்னு கேட்டாரு ,அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு இந்த உலகத்துலயே உயர்வானது என்னோட கழுதையோட வேர்வைதாணு சொன்னாரு ,மரியாதை ராமனோட பதில கேட்டு எல்லாருக்கும் குழப்பம் வந்திடுச்சு ,அது எப்படி உங்க கழுதையோட வேர்வைதான் உலகத்துலயே உயர்ந்ததுனு சொல்றீங்கனு கேட்டாரு ,
அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு உலகத்தோடு விதியை மாத்த போறது ஒவ்வொருத்தரோட உழைப்பும் அவரோட வியர்வையும் மட்டுமே ,ஆனா ஒவ்வொருத்தரும் தன்னோட நலத்துக்க்காக மட்டுமே வேர்வை சிந்துராம் ,ஆனா என்னோட கழுத அடுத்தவங்களுக்காக வேர்வை சிந்தி உழைக்குது ,அந்த உழைப்ப நீங்க மதிக்க மாட்டீங்களானு கேட்டாரு , மரியாதை ராமன் வோட பதில கேட்டு தன்னோட தோல்விய ஒத்துக்கிட்டாரு அந்த அறிஞர்
அடுத்ததா வந்த இன்னொரு அறிஞர் எழுந்திரிச்சி நிலாவோட எடை என்னனு கேட்டாரு ,அதுக்கு மரியாதை ராமன் ராத்திரி நேரத்துல என்னோட கழுதையோட நிழலாட எடைதான் நிலாவோட எடைனு சொன்னாரு ,
அதுக்கு அந்த அறிஞர் எங்க உங்க கழுதையோட நிழல எடை போட்டு காட்டுங்க பார்ப்போம்னு சொன்னாரு ,இத கேட்ட அரசர் அப்பாடா இந்த தடவ இந்த மரியாதை ராமன் நல்லா மாட்டிகிட்டாருனு நினைச்சாரு , அப்பத்தான் மரியாதை ராமன் சொன்னாரு எதுக்கு வீணா கழுதையோட நிழலை தனியா அளந்துக்கிட்டு நீங்க தெராசோட ஒரு தட்டுல நிலாவ வைங்க அப்புறமா நான் கழுதையோட நிழல இன்னொரு தட்டுல வைக்கிறேன்னு சொன்னாரு
இத கேட்ட அரசனுக்கு இந்த கேள்வியிலயும் மரியாதை ராமன் ஜெயிச்சிட்டாருனு புரிஞ்சிக்கிட்டாரு ,அடுத்ததா ஒரு அறிஞர் கேட்டாரு இந்த உலகத்துலேயே அந்த அரசர் மிக சிறந்த ஆட்சியாளர்னு கேட்டாரு ,அதுக்கு மரியாதை ராமன் தன்னோட கழுதைய நோக்கி கைகாட்டுனாரு
உடனே அங்க இருந்த எல்லாரும் கோபத்துல எழுந்து நிக்க ஆரம்பிச்சுட்டாங்க , நீங்க எங்களோட அரசர் வேணும்னே கோபப்படுத்துற மாதிரி பதில் சொல்லறீங்க , அது எப்படி இந்த கழுதைதான் நல்ல ஆட்சியாளர்னு சொல்றீங்கனு கேட்டாங்க
அதுக்கு மரியாதை ராமன் சொன்னாரு இந்த உலகத்துல இருக்குற ஆட்சியாளர்கள் எல்லாம் அடுத்தவங்கள ஆட்சி செஞ்சு பெரிய ஆட்சியாளர்களா இருக்காங்க ,என்னோட கழுத அப்படி இல்ல அது தன்னையே ஆட்சி செஞ்சுகிட்டு இருக்கு ,உதாரணத்துக்கு பொதி சுமந்துக்கிட்டு போகும்போது கால் வலிக்குதுன்னு கீழ உக்காந்துடுச்சுனா எந்த அரசர் வந்து முயற்சி செஞ்சாலும் அத எழுப்ப முடியாது ,ஆனா தன்ன தானே ஆட்சி செய்யுற என்னோட கழுத நினச்சா மட்டுமே அது முடியும்னு சொன்னாரு
அப்பத்தான் அந்த அரசருக்கு புரிஞ்சது ,மரியாதை ராமன கழுதையோட ஒப்பிட்டு கடிதம் அனுப்பிச்சதால ,ஒவ்வொரு கேள்விக்கும் கழுதையவே முன்னிறுத்தி தன்னை அசிங்க படுத்துறாருனு புரிஞ்சிக்கிட்டாரு ,
இருந்தாலும் அவருக்கு மரியாதை ராமன் மேல கோபம் வர்றதுக்கு பதிலா மதிப்பே உயர்ந்துச்சு ,அதனால் மரியாதை ராமன்கிட்ட மன்னிப்பு கேட்டு ,நிறய பரிசு பொருட்களும் கொடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வச்சாரு