துரித உணவுகள் நன்மை தீமைகள் – Fast Food Advantages and Disadvantages

துரித உணவுகள் நன்மை தீமைகள் – Fast Food Advantages and Disadvantages :- வளர்ந்து வரும் அறிவியல் காலகட்டத்தில் வினாடிகளில் தயாராகும் துரித உணவுகள் உண்பதற்கு சுவையாகவும் , நேரத்தை மிச்சப்படுத்துதல் போன்ற நன்மைகளை கொண்டிருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளை பார்க்கும்போது தீமைகளே அதிகம் என்பது உண்மையாகும்

fries and burger on plate
Photo by Robin Stickel on Pexels.com

துரித உணவுகள் நன்மைகள்

  • உணவு தயாரிக்க நீண்ட நேர உழைப்பு தேவையில்லை
  • மின் மற்றும் வாயு அடுப்புகளின் பயன்பாடு குறைவு
  • உணவகங்கள் நடத்த குறைந்த இட வசதி போதுமானது
  • பிற நாடுகளின் சமையல் ருசியை குறைந்த செலவில் இங்கே பெறமுடியும்
  • அதிக பணச்செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை
  • பிளாஸ்டிக் மற்றும் டின்களில் கிடைக்கும் உணவுகள் உடனடியாக உண்ண முடிகிறது

துரித உணவுகள் தீமைகள்

  • உடலுக்கு நன்மை பயக்கும் உணவு சத்துக்கள் கிடைக்காது
  • அதீத ரசாயன பயன்பாடு உடல் உபாதைக்கு வழிவகுக்கிறது
  • உற்றார் உறவினருடன் உண்ணும் போது பழகும் வாய்ப்பு குறைகிறது
  • வேகமாக உண்ணும் பழக்கத்தால் நன்றாக மென்று விழுங்கும் பழக்கம் குறைகிறது
  • ஜீரண சக்தியை கெடுக்கும் ரசாயன பொருட்கள் உணவிற்கு செறிவூட்ட பயன்படுத்த படுகிறது
  • குழந்தைகளை கவரும் வண்ணம் செயற்கை ரசாயன நிறமிகள் பயன்படுத்த படுவதால் கண்பார்வை பாதிக்க படலாம்