Powerful Prayers – தன்னலமற்ற வேண்டுதல் :- ஒரு ஊருல விமலன் ரமணன்னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க
ரெண்டுபேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சு , ஒரே காலேஜ் போயி,ஒரே தொழிற்சாலையில வேலைபாத்தாங்க
கொஞ்ச காலதுக்கு அப்புறமா ரெண்டுபேரும் உலகத்த சுத்திப்பாக்க போனாங்க
அப்படி போகும்போது கப்பல் கவுந்து ஒரு தீவுல மாட்டிக்கிட்டாங்க
ரெண்டுபேரும் கடவுள வேண்டுறதுதான் ஒரே தீர்வுன்னு முடிவுக்கு வந்தாங்க உடனே ஒவ்வொருத்தரும் ஒரு பகுதிக்கு போயி கடவுளை வேண்டிக்க ஆரம்பிச்சாங்க
தனக்கு சாப்பிட உணவு வேணும்னு கேட்டான் விமலன் உடனே அவனுக்கு உணவு கிடைச்சது
தனக்கு பொத்திக்கிறதுக்கு போர்வ வேணும்னு வேண்டுனான் உடனே போர்வ கிடைச்சது
தன்னோட வேண்டுதலுக்குத்தான் சக்தி அதிகம் அதனாலதான் தான் என்ன வேண்டுனாலும் கிடைக்குதுன்னு நினைச்சான்
சில காலத்துக்கு அப்புறமா தனக்கு மனைவி வேணும்னு வேண்டுனான் , உடனே பக்கத்துக்கு தீவுல இருந்து ஒரு பொண்ணு நீந்தி இங்க வந்தா
நல்ல வாழ்க்கை கிடைச்ச விமலன் கடைசியா தன்னோட வீட்டுக்கு போகணும்னு வேண்டுனான்
உடனே ஒரு கப்பல் அங்க வந்தது, தன்னோட மனைவியோட கப்பல்ல ஏறுன விமலன பாத்து ஒரு முதியவர் கேட்டாரு, வேற யாரும் உன்கூட வீட்டிற்கு வராங்கலானு கேட்டாரு
நீங்க யாருன்னு கேட்டான் அதுக்கு அந்த முதியவர் இத்தனை நாளா உன்னோட வேண்டுதலை நிறைவேத்துனது நான்தானு சொன்னாரு
அப்பத்தான் ராமணனோட நினைப்பே வந்தது
அய்யா எனக்கு ராமணன்னு ஒரு நண்பன் இருந்தான் அவனுக்கும் எனக்கும் போட்டி யாரோட பிரார்த்தனையை நீங்க நிறைவேத்துறீங்கன்னு,
நான் வேண்டுநத எல்லாத்தையும் கொடுத்ததும் நன்றின்னு சொன்னான்
ரமணன் ஏதாவது வேண்டுனானு கேட்டான்
அதுக்கு கடவுள் சொன்னாரு , உன்னோட வேண்டுதலை நிறைவேத்த எனக்கு ஒன்னும் தோணல ஆனா தன்னல மில்லாத உன்னோட நண்பனாலதான் உன் வேண்டுதல்களை நிறைவேத்துனேன்
ரமணன் தனக்குன்னு எதுவும் வேண்டாம எப்போதும் உன்னோட வேண்டுதல் பலிக்கனும்னு மட்டும்தான் வேண்டுனான்
அதனாலதான் நீ ஜெயிச்ச அப்படின்னு சொன்னாரு, ரொம்ப வருத்தப்பட்டான் விமலன் தன்னோட நண்பன பாக்க உடனே கெளம்புனான்
அப்பத்தான் கடவுள் சொன்னாரு நான் எப்பவோ ரமணன என்னோட கூட்டிகிட்டேன் ,அவன மாதிரி தங்கமான குணம் படைச்ச நல்லவங்க என்கூடத்தான் இருக்கணும் அப்படின்னு சொன்னாரு
தன்னோட நண்பனோட முடிவையும் தன்னோட தவறையும் நினச்சு வறுத்த பட்டான் விமலன்