The Monkey and the Generous Elephant – யானையும் குரங்கும்:-ஒரு காட்டுக்குள்ள ஒரு யானை வாழ்ந்துகிட்டு வந்துச்சு
ஒருநாள் அந்த யானைக்கு உடம்பு சரியில்லாம போச்சு ,அதனால் காட்டுக்குள்ள நடந்து உணவு தேட முடியல
அதனால் ஒரு மரத்தடியில் படுத்துகிட்டு,அந்த பக்கம் வர்ற மிருகங்கள் கிட்ட தனக்கு உணவும் தண்ணியும் கொடுக்க சொல்லி ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிடுச்சு
ஆனா யானையோட வயித்துக்கு நாங்க கொடுக்குற உணவு பத்தாதுனு சொல்லிட்டு எல்லா மிருகங்களும் அதுங்களோட வேலைய பாக்க போயிடுச்சுங்க
ஆனா அங்க இருந்த ஒரு குரங்குக்கு மட்டும் யானையோட நிலைமைய நினச்சு ரொம்ப வருத்தமா இருந்துச்சு
அதனால தான் வச்சிருந்த வாழைபழத்தை கொண்டுவந்து யானைக்கு கொடுத்துச்சு ,கூடவே அங்க இருந்த சொரக்கா கூட்டுல கொஞ்சம் தண்ணியும் கொண்டுவந்து யானைக்கு கொடுத்துச்சு
தினமும் கொஞ்சம் கொஞ்சம் பழங்களை தன்னால முடிஞ்ச அளவு யானைக்கு கொடுத்துச்சு அந்த குரங்கு
கொஞ்ச நாள்ல யானைக்கு உடம்பு சரியா போச்சு ,அதுக்கு அப்புறமா தனக்கு உதவின குரங்க தன்னோட நண்பனா ஏத்துக்கிட்ட யானை
குரங்க தன்னோட முதுகுல ஏத்திக்கிட்டு அந்த காட்டுக்கு ராஜா மாதிரி நடந்துச்சு ,தன்னோட துதிக்கையில வேணாம் வேணாம்னு சொல்லுற அளவுக்கு பழங்களை பிடுங்கி குரங்குக்கு கொடுத்துச்சு
யாராவது குரங்கு கூட சண்டைக்கு வந்தா கூட யானை குரங்குக்கு பாதுகாப்பா இருந்துச்சு
உரிய நேரத்துல உதவி செஞ்ச குரங்கோட நல்ல குணத்துக்கு ,அந்த காட்டுக்கு ராஜா மாதிரி வாழ்கை கிடைச்சது