கரடியும் தேனிக்களும்
முன்னொருகாலத்துல ஒரு கரடி வாழ்ந்துட்டு வந்துச்சு
அந்த கரடி ரொம்ப கோபக்கார கரடி
அது சின்ன விசயத்துக்கு எல்லாம் அதிகமாக் கோபப்படும்
ஒரு நாள் அந்த கரடி காட்டு வழியா நடந்து போகும்போது அதுக்கு ரொம்ப பசிச்சுச்சு
அடடா ரொம்ப பசிக்குதேனு சாப்பிட ஏதாவது கிடைக்குமானு தேடிப்பாத்துச்சு
அப்பத்தான் மரத்துமேல இருக்குர ஒரு தேன் கூட்டப்பாத்துசு
ஆகா இன்னைக்கு நாம் அந்த கூட்ட உடைச்சம்னா நமக்கு சுவைாயன தேன் கிடைக்கும்னு வே கமா அந்த கூட்டுகிட்ட வந்துச்சு
ஒரு கையால அந்த கூட்டப்பிடிச்சு கொஞ்சம் தேன எடுத்து சாப்டுச்சு அதப்பாந்த ஒரு தேனி அந்த கரடியோட கையில
காடுக்கால கொட்டிடுச்சு
வலிதாங்காத அந்த கரடி நான் எவ்வளவு பெரிய மிருகம் என்ன ஒரு சின்ன தேனி கடிச்சு அழுக வச்சுடுச்சேனு ரொம்ப கோபப்பட்டுச்சு
இந்த தேனி விடக்குடாதுன் அந்த கூட்ட உடைக்க பாத்துச்சு
உள்ள இருந்த எல்லா தேனியும் வெளிய வந்து அந்த கரடிய மாத்தி மாத்தி கடிக்க ஆரம்பிச்சுச்சு ஒரு தேனி கொட்னதுக்கு ரொம்ப வலிச்சதே இப்ப எல்லா தேனியும் கொட்டுனா நம்மளால தாங்க முடியாதுனு பயந்த அந்த கரடி வேகமா ஓட அரம்பிச்சுச்சு
தொடர்ந்து துரத்திகிட்டு வந்த அந்த தேனிக் கூட்டம் விடாம அந்த கரடிய கடிக்க ஆரம்பிச்சது
வலிதாங்காத அந்த கரடி பக்கத்துல இருந்த குளத்துல குதிச்சு தேனிங்க கிட்ட இருந்து தப்பிச்சது இந்த கதையில் இருக்குர நீதி என்னா அதிகமா கோபப்பட்டம்னா நமக்கு தான் ஆபத்து
ஆகவே குழந்தைகளே என்ன நடந்தாலும் கோபப்படாம நிதானமா இருந்தீங்கன்னா எப்பவும்
சந்தோசமா வாழலாம்
1 thought on “The Bear and the Bees கரடியும் தேனீக்களும்”
Comments are closed.
I have one dout can I upload this in YouTube channel?