சிந்துபாத் கதைகள் pdf download :- சிந்துபாத்ங்கிற கப்பலோட்டி பாக்தாத் நகரத்துல வாழ்ந்துகிட்டு வந்தான்
அவனுக்கு கடல்ல தூர தூர தேசங்களுக்கு போகிறது ரொம்ப பிடிக்கும்
அதனால் அவன் எப்பவும் கடல் பயணம் போய்கிட்டே இருப்பான்
ஒருநாள் அவன் கப்பல்ல போகும்போது ஒரு பெரிய புயல் அடிச்சுச்சு ,கப்பல் கொஞ்சம் கொஞ்சமா உடைய ஆரம்பிச்சுச்சு ,
உடனே எல்லா பயணிகளும் கடல்ல குதிச்சு தப்பிக்க பாத்தாங்க
சிந்துபாத்தும் அவனோட நண்பன் ஹக்கீமும் கடல்ல ஒண்ணா நீந்த ஆரம்பிச்சாங்க
கடைசியா ஒரு தீவுக்கு போய் சேர்ந்தாங்க ,அந்த தீவுல அவுங்கள தவிற வேற யாருமே இல்ல
உடனே ஹக்கீம் சொன்னாரு நாம உயிர் பிழைக்கனும்னா நல்ல தண்ணி இருக்குற இடத்த கண்டுபிடிக்கணும்னு
உடனே ரெண்டு பேரும் தீவோட உள்பகுதிக்கு போனாங்க
அப்படி போகும்போது ஒரு பெரிய ராட்சசன பார்த்தாங்க ,பயந்து போன சிந்துபாத் கொஞ்சம் தைரியத்தோட அந்த ராட்சசன பின் தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சான்
அந்த ராட்சசன் நிறய புதையல் இருக்குற இடத்துல போய் படுத்து தூங்க ஆரம்பிச்சான் ,அப்ப அங்க ஒரு வீரன் வந்தான்
அடடா நீங்க எப்படி இங்க வந்தீங்கன்னு கேட்டாங்க சிந்துபாத்தும் ஹக்கீமும்
அதுக்கு அந்த வீரன் சொன்னான் நான் என்னோட கப்பல் கவிந்ததால இங்க வந்தேன் ,இந்த ராட்சசன் என்ன பிடிச்சி வச்சுக்கிட்டான் என்ன காப்பாத்துங்கனு சொன்னான் அந்த வீரன்
அந்த ராட்சசன் ரொம்ப பலசாலியா தெரியுறான் நாங்க எப்படி உன்ன காப்பாத்துறதுனு கேட்டாரு ஹக்கீம்
உடனே அந்த வீரன் சொன்னான் அந்த ராட்சசனுக்கு அடுத்து இருக்குற குகைள ஒரு கத்தி இருக்கு அத எடுத்து இந்த ராட்சசன் தலையில வச்சா நாம தப்பிச்சிடலாம்னு சொன்னான்
உடனே சிந்துபாத் மெதுவா நடந்து அந்த குகைக்கு போனாரு ,அங்க ஒரு கத்தி இருந்துச்சு அத சுத்தி நிறய பாம்பும் இருந்துச்சு
மெதுவா அந்த கத்திய எடுத்த சிந்துபாத் மெதுவா வந்து அந்த ராட்சசனோட தலையில வச்சாரு அந்த கத்திய
உடனே அந்த ராட்சசன் முயல் குட்டியா மாறிட்டான் ,உடனே தங்களுக்கு தேவையான புதையலையும் ,தண்ணியையும் எடுத்துக்கிட்ட அவுங்க மூணுபேரும் கடற்கரைக்கு வந்தாங்க
அப்ப அங்க நிறய மரம் தண்ணில மிதக்குறத பாத்தாங்க ,உடனே அது எல்லாத்தையும் ஒன்னா சேர்த்து கட்டு ஒரு சின்ன படகு செஞ்சாங்க
தைரியசாலியாக சிந்துபத்தோட துணிச்சலால அவுங்க எல்லாரும் தப்பிச்சு போய்ட்டாங்க