The Smaller Line – சிறிய கோடு -பெரிய கோடு -Akbar Birbal Story:- அக்பரும் பீர்பாலும் ஒருநாள் அரண்மனை தோட்டத்துல நடந்துக்கிட்டே நாட்டு நடப்ப பத்தி பேசிகிட்டு இருந்தாங்க
அப்ப அரண்மனை குழந்தைகள் அந்த தோட்டத்துல விளையாடிகிட்டு இருக்குறத பார்த்தாங்க
அப்ப ஒரு குழந்தை ஒரு சுண்ணாம்பு கட்டிய எடுத்து ஒரு பெரிய கொடு போட்டுச்சு
இத பார்த்த அக்பர் திடீர்னு கேட்டார் ,பீர்பால் இந்த கோட்ட அளிக்காம இந்த கொட்ட சின்னத்தாக்க முடியுமானு கேட்டாரு
அதுக்கு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம ,அந்த சுண்ணாம்பு கட்டிய அந்த குழந்தைகிட்ட இருந்து வாங்கி பக்கத்துல இன்னொரு பெரிய கோடு வரைஞ்சாறு பீர்பால்
இப்ப பாருங்க அரசே இந்த கோடு இப்ப சின்னதாகிடுச்சுனு சொன்னாரு ,
உடனே அக்பரும் ,அங்க இருந்த சின்ன குழந்தைகளும் மனசு விட்டு சிரிச்சாங்க