Double Loss-Akbar Birbal Story-பாட்டியின் பணம் :-அக்பரோட நகரத்துல ஒரு வயசான பாட்டி இருந்தாங்க ,அவுங்க ஒருநாள் வெளியூர் போக வேண்டி வந்துச்சு ,அதனால தான் இத்தனை நாலா சேர்த்து வச்சிருந்த பணத்தை எல்லாம் ஒரு பானைல போட்டு பக்கத்துல இருக்குற ஒரு சாமியார் கிட்ட கொடுக்க போனாங்க
ஆனா அந்த சாமியார் இந்த பணம் ,பொன் மேல எல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது அதனால எங்கிட்ட இத கொடுக்காதீங்கன்னு சொன்னாரு
இத கேட்ட பாட்டிக்கு அந்த சாமியார் மேல ரொம்ப மரியாதையை வந்துச்சு ,அவரு வேண்டாம்னு சொன்னதுக்கு அப்புறம் கூட அந்த பணத்தை அங்க இருக்குற தோட்டத்துல புதைச்சு வச்சுட்டு ,நான் திரும்பி வந்து எடுத்துகிறேன்னு சொல்லிட்டு ஊருக்கு போய்ட்டாங்க
திரும்பி வந்து பார்த்தப்ப அந்த இடத்துல பானை இல்லை ,இது பத்தி அந்த சாமியார் கிட்ட கேட்டப்ப ,நான் வேணாம்னு சொன்னதுக்கு அப்புறம் என் தோட்டத்துல பணத்த பொதச்சு வச்சிட்டு ,இப்ப காணம்னு சொன்னா எனக்கு எப்படி தெரியும்னு சொல்லி அந்த பாட்டிய வெளிய அனுப்பிச்சிட்டாரு
இத கேட்ட பாட்டிக்கு ரொம்ப வருத்தமா போச்சு ,உடனே பீர்பால பார்க்க போனாங்க ,அவுங்களோட பணத்தை எப்படியாச்சும் திருப்பி வாங்கிடலாம்னு ஆறுதல் சொன்னாரு பீர்பால்
பீர்பால் ஒரு காவலனை கூப்பிட்டு தன்னோட கழுத்துல இருந்த வைர நகையை போட்டுக்க சொன்னாரு ,அவன் போட்டதும் அப்புறமா நீ நேரா அந்த பாட்டி சொன்ன சாமியார போய் பாரு ,அவருகிட்ட நான் வெளியூர் இந்த வைர நகை ரொம்ப விலைமதிப்பு இத பார்தோகொங்கனு சொல்லுன்னு சொல்லி அனுப்பிச்சாரு
அதோட ,அந்த பாட்டிகிட்ட நீங்க அந்த காவலன் போய் நகைய கொடுக்குற சமயத்துல போய் பணத்தை கேளுங்கன்னு சொல்லி அனுப்பிச்சாரு
உடனே அந்த பாட்டியும் ,அந்த காவலனும் அந்த சாமியார் வீட்டுக்கு போனாங்க , பாட்டிய வெளிய நிக்க வச்சிட்டு அந்த காவலன் மட்டும் உள்ள போய் அக்பர் சொன்ன மாதிரியே சொன்னான்
அப்ப அந்த சாமியார் சொன்னாரு ,எனக்கு பணத்து மேல ஈடுபாடு கிடையாது ,நீ வேணும்னா என் வீட்டுல எங்கயாவது அந்த வைர நகையை வச்சிட்டு போனு சொன்னாரு
அப்பர் அப்படி சொல்றப்ப அங்க வந்த பாட்டிய பார்த்ததும் திகைப்பாகிடுச்சு அந்த திருட்டு சாமியாருக்கு ,
அடடா இப்ப அந்த பாட்டி பணத்த கேட்டா நம்ம மேல இருக்குற நம்பிக்க இந்த காவலனுக்கு போய்டும் அப்புறம் அந்த வைர நகையை கொடுக்க மாட்டான்னு யோசிச்சாறு
பாட்டி பேசுறதுக்கு முன்னாடியே ,பாட்டி நீங்க கொடுத்துட்டு போன பண பானை அடுப்படியில இருக்கு நீங்க சரியா தேடாம போய்ட்டிங்கனு சொன்னாரு
உடனே பாட்டி அடுப்படிக்கு போய் அந்த பானையை எடுத்தாங்க ,உடனே அந்த காவலன் தன் இடுப்புல இருந்த சவுக்கு எடுத்து சாமியார ஒரு அடி அடிச்சான்
பதறிப்போன சாமியார் கேட்டாரு எதுக்கு அடிக்குறீங்கன்னு கேட்டான் ,அப்ப அந்த காவலன் சொன்னான் பீர்பால் சொல்லித்தான் இங்க வந்தேன் ,பாட்டியோட பணத்தை தொடவே மாட்டேன்னு சொல்லிட்டு அடுப்படியிலயா ஒளிச்சி வச்சிருக்கனு சொல்லி அவன பிடிச்சி அக்பர் கிட்ட கொண்டுபோய் நடந்தத சொன்னான்
அக்பர் அந்த திருட்டு சாமியாருக்கு 100 சவுக்கடி கொடுத்து சிறையில அடைச்சாரு