கோபக்கார வியாபாரி – The Short Tempered Merchant – Birbal Story in Tamil:-பீர்பால் ஒரு தடவ பக்கத்து ஊருக்கு பயணம் போயிருந்தாரு,அந்த ஊருல கணவர் இறந்துட்டா அவரோட மனைவிக்கு தலையை மொட்டையடிக்கிறத வழக்கமா வச்சிருக்குறத தெரிஞ்சிக்கிட்டாரு
அந்த ஊருல ஒரு கோபக்கார வியாபாரி இருந்தாரு ,ஒருநாள் அவர் சாப்பிடும்போது சாப்பாட்டுல ஒரு முடி இருந்துச்சு ,ரொம்ப கோபப்பட்ட அந்த வியாபாரி இனிமே என் சாப்பாட்டுல முடி இருந்தா உன் தலைய மொட்டையடிச்சிடுவேன்னு சொன்னாரு
கொஞ்ச நாளுக்கு அப்புறமா சாப்பாட்டுல முடியிருக்குறத பார்த்த அந்த வியாபாரி ,ரொம்ப கோபமாகி தன்னோட மனைவிக்கு மொட்டை அடிக்க ஆள வரசொல்லிட்டாரு
இத கேட்ட அவரோட மனைவி தன்னோட அண்ணன்களுக்கு செய்தி சொல்லி அனுப்பிச்சிட்டு ஒரு அறைக்குள்ள போயி கதவ மூடிக்கிட்டாங்க
சேதி தெரிஞ்சிகிட்ட அவுங்களோட அண்ணன்கள் பீர்பால் கிட்ட உதவி கேட்டாங்க
அதுக்கு பீர்பால் சொன்னாரு நீங்க மூணு பேரும் சட்டை போடாம ,தோள்ல துண்டு மட்டும் போட்டுக்கிட்டு உங்க தங்கச்சி வீட்டுக்கு போங்க நானும் வந்திடுறேனு சொன்னாரு
அதுக்குள்ள மொட்டையடிக்க ஆள் வந்துட்டதால கதவ தொறக்க சொல்லி கத்திக்கிட்டு இருந்தாரு அந்த வியாபாரி
அப்பத்தான் அங்க வந்தாங்க அவரோட மனைவியோட மூணு அண்ணன்களும் ,அவுங்க போட்டிருக்க உடைய பார்து சந்தேக பட்ட வியாபாரி கேட்டாரு எதுக்கு இப்படி உடை உடுத்தி இருக்கீங்கன்னு
அப்ப அங்க வந்த பீர்பால் சொன்னாரு ,இந்த ஊருல கணவர் இறந்து போனா தான் மனைவிக்கு மொட்டையடிப்பாங்கனு எனக்கு தெரியும் ,அதான் இறுதி சடங்கு செய்ய அவனுங்க இப்படி வந்திருக்காங்க ,நீங்க மொட்டையடிங்க உங்கள புடிச்சி அரசு செலவுல தூக்குல தொங்க விட்டு இறுதி சடங்க நானே நல்ல படியா செஞ்சு வைக்குறேனு சொன்னாரு
இத கேட்ட அந்த வியாபாரிக்கு அப்பத்தான் நல்ல புத்தி வந்துச்சு ,எப்ப பாத்தாலும் கோபப்படுற தன்னோட குணத்தை மாத்திக்கிடுறேனு ,அவரோட மனைவிகிட்டயும் அவுங்க அண்ணன்கள் கிட்டயும் சொன்னாரு அவரு