Birbals Guru – பீர்பாலின் குரு – Akbar Birbal Stories in Tamil:-ஒரு முறை அக்பருக்கு புத்திசாலியான பீர்பாலோட குருவ சந்திக்கனும்னு தோணுச்சு ,உடனே பீர்பால் கிட்ட இத பத்தி சொன்னாரு
ஆனா உண்மையிலேயே பீர்பாலுக்கு குருனு யாருமே இல்ல,அதனால் குரு காசிக்கு போயிருக்காரு ,ராமேஸ்வரம் போயிருக்காருனு பொய் சொல்லிகிட்டே இருந்தாரு
ஒரு கட்டத்துல கோபமான அரசர் நாளைக்கு உங்க குரு எங்க இருக்காருன்னு சொல்லுங்க நாம் அவரு எங்க இருந்தாலும் போய் பாக்கலாம்னு கண்டிப்பா சொல்லிட்டாரு
பீர்பாலுக்கு என்ன செய்றதுன்னே தெரியல அதனால ஒரு ஆடு மேய்க்கிறவர குரு மாதிரி வேஷம் போட்டு ஒரு கோவில் மடத்துல உக்கார வச்சாரு
நாளைக்கு அரசர் வந்து உங்களுக்கு பரிசு கொடுப்பாரு ,அப்படி அவர் எவ்வளவு பணம் கொடுத்தாலும் பதில் பேசாம அமைதியா இருக்கணும்
அவர் என்ன கேட்டாலும் கைல இருக்குற ருத்திராட்ச மாலைய உருட்டிகிட்டே இருக்கணும்னு சொன்னாரு
மறுநாள் அக்பரும் சில மந்திரிகளும் பீர்பாலோட குருவ பாக்க போனாங்க
அப்ப அக்பர் நிறய பணம் ,தங்க காசுன்னு அவருக்கு பரிசு கொடுத்தாரு
அது எதையுமே வாங்காம பீர்பால் சொன்ன மாதிரியே ருத்திராட்ச மலைய உருட்டிகிட்டே இருந்தாரு அந்த ஆடு மேய்க்கிறவரு
ரொம்ப பொறுமை இழந்த அக்பர் ,பீர்பால் கிட்ட ,ஒரு முட்டாள பார்த்தா எப்படி நடந்துக்கணும்னு சொல்லுங்கனு எல்லாருக்கும் கேக்குற மாதிரி சொன்னாரு
உடனே பீர்பால் சொன்னாரு ,எங்க குரு மாதிரி அமைதியா ருத்திராட்ச மாலைய உருட்டனும்னு சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு புரிஞ்சது ,தன்னை முட்டாள்னு பீர்பால் சொல்லிட்டாருனு
இருந்தாலும் குருவுக்கும் பீர்பாலுக்கும் நிறய பரிசு கொடுத்தாறு அக்பர்