The Priceless Diamond – கல்கண்டு வைரம் – Akbar Birbal Stories with Moral:-அக்பருக்கு ஒரு நாள் வைர நகைகள் மேல ஆச வந்துச்சு ,உடனே மந்திரிகள் கிட்ட அந்த விஷத்தை சொன்னாரு
உடனே ஒரு மந்திரி ஒரு பெரிய வைர வியாபாரி கிட்ட இருந்து ஒரு வைர மலைய கொஞ்ச காசு மட்டுமே கொடுத்து வாங்கிட்டு வந்து கொடுத்தாரு அக்பருக்கு
அந்த வைர வியாபாரி இந்த மந்திரியால தனக்கு ரொம்ப நஷ்டம் வந்திடுச்சுனு சொல்லி பீர்பால் கிட்ட சொன்னாரு
உங்களுக்கான நிவாரணம் கிடைக்கும் அதுக்கு நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்னு சொன்னாரு
அந்த வைர வியாபாரியும் சரினு சொன்னாரு
உடனே பீர்பால் ஒரு பெரிய கல்கண்டு கட்டிய கொடுத்து ,இத வைரம் மாதிரி எளச்சு மெருகேத்தி ,ஒரு நகைள மாட்டி கொண்டுவாங்கனு சொன்னாரு
அந்த வியாபாரியும் அப்படியே செஞ்சாரு
மறுநாள் அக்பர் குளிக்க போறப்ப சரியா அங்க வந்த பீர்பால் ,அரசே இங்க பாருங்க அருமையான வைர நகை ,இத நீங்க போட்டுக்கிட்டா ரொம்ப நல்லா இருக்கும்னு சொன்னாரு
உடனே அரசரும் அத வாங்கி போட்டுக்கிட்டு குளிக்க போனாரு , அக்பர் குளிக்கும்போது அந்த கல்கண்டு கரைஞ்சு போச்சு
திரும்பி வந்து பாத்த அக்பருக்கு அதிர்ச்சியா இருந்துச்சு ,இது என்ன வைரத்தை காணமேனு வருத்தப்பட்டாரு
உடனே பீர்பால கூப்பிட்டு இந்த விஷயத்தை சொன்னாரு
அரசே ,அந்த வைர நகை வியாபாரி பணம் வாங்க இன்னும் காத்துகிட்டு இருக்காரு ,நீங்க நகைய தொலச்சாலும் பரவாயில்லை அவருக்கு பணம் கொடுங்கன்னு சொன்னாரு
உடனே அக்பரும் அந்த நகைக்கு பணம் கொடுத்தாரு ,அந்த பணத்தை அந்த வைர வியாபாரிகிட்ட கொடுத்து அவருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செஞ்சாரு பீர்பால்